AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : 10 நாட்களில் ரூ.5,000 வரை உயர்ந்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இது சரியான நேரமா?

Gold Price Increased Around 5000 Rupees | தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் ரூ.5,000 விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா என பார்க்கலாம்.

Gold Price : 10 நாட்களில் ரூ.5,000 வரை உயர்ந்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இது சரியான நேரமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Aug 2026 13:13 PM IST

தங்கம் விலை (Gold Price) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. குறிப்பாக ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து மந்தமான நிலையில் விற்பனையானது. தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இடையில் அவ்வப்போது சற்று சரிவையும் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா, இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்தித்து வரும் தங்கம்

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
05 ஆகஸ்ட் 2026 ரூ.13,480 ரூ.1,07,840
06 ஆகஸ்ட் 2026 ரூ.13,750 ரூ.1,10,000
07 ஆகஸ்ட் 2026 ரூ.13,900 ரூ.1,11,200
08 ஆகஸ்ட் 2026 ரூ.13,965 ரூ.1,11,720
09 ஆகஸ்ட் 2026 ரூ.13,965 ரூ.1,11,720
10 ஆகஸ்ட் 2026 ரூ.13,950 ரூ.1,11,600
11 ஆகஸ்ட் 2026 ரூ.14,150 ரூ.1,13,200
12 ஆகஸ்ட் 2026 ரூ.14,200 ரூ.1,13,600
13 ஆகஸ்ட் 2026 ரூ.14,220 ரூ.1,13,760
14 ஆகஸ்ட் 2026 ரூ.14,040 ரூ.1,12,320

ஆகஸ்ட் 05, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் வெறும் ரூ.13,480-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே இன்று (ஆகஸ்ட் 14, 2026) ஒரு கிராம் ரூ.14,040-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.560 உயர்ந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.4,480 உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : Gold Price : தங்கம் விலை ரூ.1.30 லட்சத்தை தாண்டும்.. பீட்டர் ஷிப் கணிப்பு!

தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது சரியானதா?

ஜூன் மாதத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்திருந்தாலும், தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது சரியான நேரமாக இருக்கும் என்றும் இனி வரும் காலங்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : லோன் வாங்கி கார் வாங்க போறீங்களா?.. இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தற்போதே முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us