AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய விதிகள்.. மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!

New Rules In Withdrawing PF Money From EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பிஎஃப் பணம் எடுப்பது தொடர்பாக சில முக்கிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அது குறித்து மக்களவையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய விதிகள்.. மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Aug 2026 11:35 AM IST

இந்தியாவில் பணியாற்றும் கோடிக்கணக்கான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய அம்சமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) உள்ளது. இந்த நிலையில் தான், பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுப்பது தொடர்பான சில முக்கிய விதிகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என அனைவரும் அது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.

இந்த நிலையில், பிஎஃப் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் செய்ய உள்ளதாக அரசு கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் பணத்தை எடுக்க புதிய விதிகள் – என்ன என்ன?

பிஎஃப் பணத்தை எடுப்பது தொடர்பாக மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பிஎஃப் பணத்தை எடுப்பது தொடர்பான புதிய விதிகள் குறித்து விளக்கமளித்தார். அதில், இனி ஊழியர்கள் பணியில் இருந்து விலகிய பிறகு தங்களது முழு பிஎஃப் தொகையையும் பெற 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தினம் ரூ.166 முதலீடு செய்தால் போதும்.. ரூ.16.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?

ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்கும் விதி

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பணத்தை எடுப்பதற்கு 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த புதிய காத்திருப்பு விதிகள் அமலில் இருந்தாலும், ஊழியர்கள் தங்களது அவசர தேவைகளுக்கு பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு ஏற்ப விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!

தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது கணக்கில் உள்ள பிஎஃப் பணத்தை 75 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், எந்த காரணமும் குறிப்பிடாமலே ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us