AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!

FMGC Companies Planning For Price Hike | பணவீக்கம் உள்ளிட்டவை விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த நிலையில், 2026 செப்டம்பர் மாதத்தில் FMGC நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Aug 2026 13:07 PM IST

விலைவாசி உயர்வு பொதுமக்களின் வாழ்வில் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்வில் பால், டீ தூள், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர். இந்த பொருட்களை தவிர்க்க முடியாது என்பதால், இவற்றின் விலை உயரும்போது பொதுமக்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

ஏற்கனவே விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்கள் கவலையில் உள்ள நிலையில், தற்போது அடுத்த சில மாதங்களில் பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு வெளியாக உள்ளது.

பொருட்களின் விலையை உயர்த்த உள்ள FMGC நிறுவனங்கள்

2026, செப்டம்பர் காலாண்டில் தங்களின் உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்த உள்ளதாக FMGC (Fast Moving Consumer Goods) நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சில நிறுவனங்கள் 2 முதல் 5 சதவீதம் வரை பொருட்களின் விலையை அதிகரித்தன. இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திலும் சில நிறுவனங்கள் தங்களது பொருட்களுக்கான விலையை அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : EPFO : பிஎஃப் பணம் எடுக்க இனி இது அவசியம் இல்லை.. வந்தது அதிரடி மாற்றம்!

Shrinkflation-ஐ கடைபிடிக்க உள்ள நிறுவனங்கள்

சில நிறுவனங்கள் பொருட்களுக்கான விலையை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள் Shrinkflation-ஐ கையாள உள்ளன. அதாவது பொருட்களின் விலையை உயர்த்தாமல் அவற்றின் அளவை குறைப்பதுதான் Shrinkflation. இந்த முறையில் பெரும்பாலான நிறுவனங்கள் ரூ.10 மற்றும் ரூ.5 பாக்கெட்டுகளில் அளவை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இதையும் படிங்க : லோனுக்கான தவணையை செலுத்த தவறினால் உங்களுக்கு மிரட்டல் வருகிறதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதி

இந்த முறையை பிரிட்டானியா நிறுவனம் கையில் எடுக்க உள்ளது. அதாவது, அந்த நிறுவனம் தனது ரூ.5 மற்றும் ரூ.10 பிஸ்கெட் பாக்கெட்டுகளின் அளவை குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி சர்க்கரை மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை உயர்த்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சமானிய மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது.

Follow Us