கேஸ் சிலிண்டருக்கு புதிய வரி.. ஆலோசனை மேற்கொண்டு வரும் அரசு.. வெளியான முக்கிய தகவல்!
New Tax For LPG Gas Cylinders | இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு சேமிப்பு கிடங்கு இருப்பதை போல எல்பிஜி-க்கு இல்லை. இதன் காரணமாக ஈரான் போரின் போது இந்தியா கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்ட நிலையில், எல்பிஜி சேமிப்பு கிடங்கை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஈரான் போர் (Iran War) காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அமெரிக்கா (America) நடத்திய தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக ஹோர்முஸ் நீரிணையை (Strait Of Hormuz) மூடிய ஈரான், உடல நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துச் செல்ல தடை விதித்தது. இதுவே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடுக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இந்த சூழலை சமாளிக்க இந்திய அரசு கேஸ் சிலிண்டர் புக் செய்வது தொடர்பான புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், எதிர்கால கேஸ் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எல்பிஜி-க்கு வளைகுடா நாடுகளை நம்பியுள்ள இந்தியா
இந்தியா தனது எல்பிஜி (LPG – Liquified Petroleum Gas) தேவைகளுக்கு வளைகுடா நாடுகளையே பெரிய அளவில் நம்பியுள்ளன. இதன் காரணமாக தான், ஈரான் போரின் போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய முடியாமல் இந்தியா தவித்தது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தேவையான கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்படுவதை போல எல்பிஜி சேமித்து வைக்கப்படாதது தான். இவ்வாறு சேமிக்கப்படும் கச்சா எண்ணெய், வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் வராத அவசர காலங்களின் போது பயன்படுத்தப்படும். ஆனால், அத்தகைய சேமிப்பு எல்பிஜி-க்கு இல்லாததன் காரணமாக தான் ஈரான் போரின் போது இந்தியா சவால்களை எதிர்க்கொண்டது.




இதையும் படிங்க : விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!
கேஸ் சேமிப்பு கிடங்கை உருவாக்க மத்திய அரசு திட்டம்
கச்சா எண்ணெயை போல கேஸ் சிலிண்டருக்கும் சேமிப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, சுமார் 42 மில்லியன் டாலர் முதலீட்டில் கேஸ் சேமித்து வைக்கும் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு நிதி திரட்ட எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் பெறுவது தொடர்பாகவும் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு லட்சங்களில் ரொக்கப் பரிசு.. அரசின் முக்கிய விருதுகள் & தகுதிகள்
இதன் மூலம் நாம் கேஸ் சிலிண்டர் வாங்கும்போது செலுத்தும் கட்டணத்திற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.