EPFO : பிஎஃப் பணம் எடுக்க இனி இது அவசியம் இல்லை.. வந்தது அதிரடி மாற்றம்!
Important Update In EPFO | நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான முக்கிய சேமிப்பாத இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு புதிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரைவாக தீர்த்துவைக்கப்படும் பிஎஃப் க்ளெய்ம்கள்
2025 – 2026 நிதியாண்டில் மட்டும் இபிஎஃப்ஓ அமைப்பு மொத்தம் சுமார் 8.3 கோடி கிளைம்களை தீர்த்து வைத்துள்ளது. இதுவே முந்தைய நிதியாண்டு (2024 – 2025) இது வெறும் 6 கோடியாக மட்டுமே இருந்தது. டிஜிட்டல் ஆட்டோமேஷன் (Digital Automation) மற்றும் விரைவான செயலாக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக கடந்த நிதியாண்டில் பெரும்பாலான கிளைம்கள் தீர்த்து வைக்கப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவலை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!




இனி பிஎஃப் பணத்தை எடுக்க Cancelled Cheque தேவையா?
பொதுவாக இபிஎஃப்ஓவின் இணையதளம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க ஊழியர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது வங்கி கணக்கை உறுதி செய்வதற்காக ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி கணக்கு பாஸ்புக் நகலை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், அது குறித்த முக்கிய அறிவிப்பை இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!
இபிஎஃப்ஓவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின்படி, இந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் முறை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்யும் ஊழியர்கள் இனி தங்களது வங்கி கணக்கு புத்தக நகலையோ அல்லது கேன்சல் செய்யப்பட்ட செக் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இந்த மாற்றம் கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.