Gold : இரண்டு நாட்களில் ரூ.5,000 விலை உயர்வை சந்தித்த தங்கம்.. திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
Gold Price Increased 5000 Rupees In Just Two Days | ஜூன் மாதம் முதலே பெரிய அளவில் விலை ஏற்றத்தை காணாமல் இருந்து வந்த தங்கம், கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளது.
பங்குச்சந்தை, புவிசார் பதற்றம், தங்கத்தின் தேவை உள்ளிட்டவை தான் தங்கம் விலையில் (Gold Price) தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. இவற்றின் காரணமாக தான், தங்கம் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஜூன் மாதம் கடும் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாதத்தில் வெறும் ரூ.13,000-க்கு குறைந்தது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தாலும் ரூ.14,000-த்தை தாண்டமல் உள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து நகை பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மீண்டும் விலை உயர்வை சந்திக்கும் தங்கம் – காரணம் என்ன?
கடந்த ஒரு வாரமாக ஈரான் மற்றும் ஓமன் (Iran and Oman) மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஈரான் மற்றும் அமெரிக்கா போர் (Iran and America War) நிறுத்தம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சற்று சுமூகமான சூழல் நிலவி வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக டாலர் மதிப்பும், அமெரிக்க அரசு பத்திரத்தின் மீதான லாபமும் குறைந்தே காணப்படுகிறது.




இதையும் படிங்க : அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு லட்சங்களில் ரொக்கப் பரிசு.. அரசின் முக்கிய விருதுகள் & தகுதிகள்
2 நாட்களாக கடும் உயர்வை சந்தித்து வரும் தங்கம்
இவற்றின் காரணமாக முதலீட்டு சந்தையில் பண புழக்கத்தின் போக்கு தங்கத்தின் மீது திசை திரும்பியுள்ளது. அதன் விளைவாக ஜூன் மாதம் முதல் அவ்வப்போது கிராமுக்கு ரூ.20, ரூ.30 உயர்வை சந்தித்து வந்த தங்கம் கடந்த இரண்டு நாட்களாக கிராமுக்கு ரூ.300 வரை உயர்வை சந்தித்து வருகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 வரையும், சவரனுக்கு ரூ.5,000 வரையும் உயர்வை சந்தித்துள்ளது.