AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கி கணக்கை போல PF கணக்குக்கும் Minimum Balance கட்டாயமா?.. இத கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

EPFO PF Minimum Balance Rules | இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான அமைப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உள்ளது. இந்த நிலையில், வங்கி கணக்கை போலவே பிஎஃப் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை கட்டாயம் இருக்க வேண்டுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கி கணக்கை போல PF கணக்குக்கும் Minimum Balance கட்டாயமா?.. இத கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Sep 2026 19:34 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் அமைப்பு தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). காரணம், இந்த அமைப்பு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து பிஃப் கணக்கில் வரவு வைக்கும். இந்த பணம், ஊழியர்களின் ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்படும்.

இந்த பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை ஓய்வுக்கு பிறகு மட்டுமன்றி, பணியின்போதும் ஊழியர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிஎஃப் பணத்தை முழுவதுமாக எடுத்துக்கொள்ளலாமா அல்லது வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதை போல பிஎஃப் கணக்குக்கும் ஏதேனும் குறைந்தபட்ச இருப்பு தொகை உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : 10 நாட்களில் ரூ.5,000 சரிந்த தங்கம் விலை.. திடீர் டிவிஸ்டுக்கு காரணம் என்ன?

பிஎஃப் கணக்குக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை கட்டாயமா?

என்னதான் பிஎஃப் பணத்தை ஓய்வுக்கு முன்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டாலும், பிஎஃப் கணக்கில் இருக்கும் முழு தொகையையும் ஊழியர்களால் எடுக்க முடியாது. காரணம், ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை பிஎஃப் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதாவது, ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் 25 சதவீத பணத்தை கட்டாயம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : இவ்வளவு மைலேஜா? ரெனால்ட் டிரைபரின் சக்திவாய்ந்த டர்போ வேரியன்ட்!

ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க முயற்சி செய்யும்போது அதில், குறைந்தபட்ச இருப்பு தொகையை விட்டுவிட்டுதான் காட்டும். உதாரணமாக, ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சம் உள்ளது என்றால், பணத்தை எடுக்க முயற்சி செய்யும்போது வெறும் ரூ.75,000-த்தை மட்டும் தான் எடுக்க முடியும் என காட்டும். ஊழியர்களின் ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் வகையில் தான், இந்த கட்டாய பிஎஃப் இருப்பு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us