10 நாட்களில் ரூ.5,000 சரிந்த தங்கம் விலை.. திடீர் டிவிஸ்டுக்கு காரணம் என்ன?
Gold Fell 5,000 Rupees In Just 10 Days | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.5,000 சரிவை சந்தித்துள்ளது.
புவிசார் பதற்றம், தேவை மற்றும் இருப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணிகளாக உள்ளன. சூழலுக்கு ஏற்ப தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் ஏற்படும். கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான உயர்வை சந்தித்தது. ஆனால், 2026 ஆம் ஆண்டு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளை போல தங்கத்திற்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், 2026 ஆம் ஆண்டு தங்கத்தின் வேகம் சற்று குறைவாகவே உள்ளது.
ரூ.15,000-ல் இருந்து ரூ.13,000-க்கு வந்த தங்கம் விலை
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஜனவரி மாதம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.5,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், 10 நாட்களில் தங்கம் விலை ரூ.5,000 வரை குறைந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : வீட்டு உபயோக பொருட்களின் விலை 5-8% உயரப்போகிறது?.. தீபாவளிக்கு முன்பு நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!




10 நாட்களில் ரூ.5,000 வரை சரிந்த தங்கம் விலை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 20 செப்டம்பர் 2026 | ரூ.14,285 | ரூ.1,14,280 |
| 21 செப்டம்பர் 2026 | ரூ.14,270 | ரூ.1,14,160 |
| 22 செப்டம்பர் 2026 | ரூ.14,185 | ரூ.1,13,480 |
| 23 செப்டம்பர் 2026 | ரூ.14,135 | ரூ.1,13,080 |
| 24 செப்டம்பர் 2026 | ரூ.14,000 | ரூ.1,12,000 |
| 25 செப்டம்பர் 2026 | ரூ.14,010 | ரூ.1,12,080 |
| 26 செப்டம்பர் 2026 | ரூ.14,000 | ரூ.1,12,000 |
| 27 செப்டம்பர் 2026 | ரூ.14,000 | ரூ.1,12,000 |
| 28 செப்டம்பர் 2026 | ரூ.13,665 | ரூ.1,09,320 |
| 29 செப்டம்பர் 2026 | ரூ.13,640 | ரூ.1,09,120 |
இவ்வாறு கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.645 சரிவை சந்தித்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.5,160 சரிந்துள்ளது.
இதையும் படிங்க : இபிஎஃப்ஓ முகாம்.. சிக்கல்களுக்கு உடனடி தீர்வு.. மிஸ் பண்ணீடாதீங்க!
தங்கம் விலை திடீர் சரிவுக்கு காரணம் என்ன?
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தலாம் என்ற எதிர்ப்பார்ப்பின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகளை கைவிட்டு, பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வரும் சிக்கல் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. இவற்றின் விளைவாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.