AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.. இன்று வழக்கம் போல் வங்கிகள் இயங்கும்!

இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று (செப்டம்பர் 28, 2026) முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.. இன்று வழக்கம் போல் வங்கிகள் இயங்கும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Sep 2026 07:17 AM IST

சென்னை, செப்டம்பர் 28 : இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று (செப்டம்பர் 28, 2026) முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வங்கி ஊழியர்களின் போராட்டம் (Bank Employees Strike) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும். தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த வங்கிகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இடையேயான பாரபட்சமான நடவடிக்கைகள் மாறுதல், ஐடிபிஐ வங்கியை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் நிறுத்தி, செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக யுனைடட் ஃபோரம் பேங்க்ஸ் யூனியன் (UFUB – United Forum Banks Union) அறிவித்தது. இதன் காரணமாக வேலை நாட்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுமக்கள் வங்கி சேவைகளை பெற முடியாத சூழல் உருவானது.

இதையும் படிங்க : முதலீடு எப்போது டபுள் ஆகும்.. பணத்தை இப்படி கணக்கு செய்து முதலீடு செய்யுங்கள்!

ஞாயிற்றுக் கிழமை செயல்பட்ட வங்கிகள்

மாத கடைசியில் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என்ற சூழல் உருவானபோது, ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்காதோ என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் தான், வங்கி ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான நேற்று (செப்டம்பர் 27, 2026) இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் வழக்கம் போல செயல்பட்டன.

இதையும் படிங்க : அடுத்த 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. யுபிஐ, ஏடிஎம் ஆகியவை செயல்படுமா?

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு

இந்த நிலையில், இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகளும், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கும் இடையே நேற்று (செப்டம்பர் 27, 2026) பேச்சுவார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சுமூகமான உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இந்த போரட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us