AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கரூர் பெருந்துயரத்தின் முதலாண்டு நினைவு நாள்.. கருப்பு உடை அணிந்து 41 பேருக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!

Karur Tragedy First Anniversary: கரூரில் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பெருந்துயரச் சம்பவத்தின் முதலாண்டு நினைவையொட்டி, பழைய பேருந்து நிலையம் எதிரே உயிரிழந்த 41 பேரின் நினைவாக மாபெரும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு உடை அணிந்து, மலர் தூவி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்திக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கரூர் பெருந்துயரத்தின் முதலாண்டு நினைவு நாள்.. கருப்பு உடை அணிந்து 41 பேருக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!
கரூர் நினைவஞ்சலி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Sep 2026 13:19 PM IST

கரூர், செப்.27: தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கரூர் வேலுச்சாமிபுரம் பெருந்துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தீராத துயரத்தின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி, கரூரில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும் மாபெரும் நினைவஞ்சலி நிகழ்ச்சி உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.

இதையும் படிக்க: “ஆறாத ரணம், தீராத வேதனை!”.. கரூர் துயர சம்பவத்தின் முதலாண்டு நினைவில் முதல்வர் விஜய் உருக்கம்!!

கருப்பு உடை அணிந்து திரண்ட தொண்டர்கள்:

கரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அஞ்சலி மேடையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆடவர்கள் கருப்புச் சட்டை மற்றும் பேண்ட் அணிந்தும், பெண்கள் கருப்புச் சேலை அணிந்தும் திரண்டு வந்து அமைதி வழியில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி மேடையில் உயிரிழந்த 41 நபர்களின் பெயர்கள் மற்றும் மெழுகுவர்த்திப் படங்களுடன் கூடிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. மேடையில் வைக்கப்பட்டிருந்த மலர்களுக்குப் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் கண்ணீர்மல்க மலர் தூவியும், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள், நெரிசல் கட்டுப்பாடு:

அஞ்சலி செலுத்தும் இடத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். சாலைகளின் நடுவே இரும்புத் தடுப்புகள் (Barricades) அமைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சீரான முறையில் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அஞ்சலி மேடையில் ஏறித் தங்களது உறவுகளின் புகைப்படங்களைப் பார்த்து விம்மியழுது கண்ணீர் சிந்திய காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தின.

இதையும் படிக்க: துப்பாக்கிச் சூடு, காவல் மரணங்கள் தகவல்கள் இனி இரகசியம்?.. RTI வரம்பிலிருந்து சட்ட ஒழுங்குப் பிரிவு நீக்கம்.. !!

வேலுச்சாமிபுரம் துயரத்தின் பின்னணி:

கடந்த ஆண்டு வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட நெரிசலால் இந்தச் சோக சம்பவம் நிகழ்ந்தது. நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்த போதிலும், மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக அதிகரித்ததே இத்தகைய அசம்பாவிதத்திற்குக் காரணமாக அமைந்தது. இத்தகைய சோக சம்பவங்கள் இனிவருங்காலங்களில் தமிழகத்தில் எங்குமே நிகழக்கூடாது என்றும், பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு உரிய கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை அரசு வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அஞ்சலி செலுத்த வந்த அனைவரின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது.

Follow Us