AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“ஆறாத ரணம், தீராத வேதனை!”.. கரூர் துயர சம்பவத்தின் முதலாண்டு நினைவில் முதல்வர் விஜய் உருக்கம்!!

CM Vijay Emotional Statement: கரூர் துயர சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். என் வாழ்நாளிலும் தமிழ்நாட்டு உறவுகளின் மனதிலும் இது ஆறாத ரணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த உறவுகளுக்குத் தனது இதய அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.

“ஆறாத ரணம், தீராத வேதனை!”.. கரூர் துயர சம்பவத்தின் முதலாண்டு நினைவில் முதல்வர் விஜய் உருக்கம்!!
கரூர் துயரம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Sep 2026 10:21 AM IST

சென்னை, செப்.27: தமிழக அரசியலிலும் மக்கள் மனங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உருக்கமான செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது எதிர்பாராதவிதமாகத் துயரச் சம்பவம் நிகழ்ந்து 41 பேர் உயிரிழந்தனர். அந்தச் சோக நிகழ்வின் நினைவாகவும், அதில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு தற்போது பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.

இதையும் படிக்க: “திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இதுதான் காரணம்!”.. உண்மையை உடைத்துப் பேசிய திருமாவளவன்!!

“வாழ்நாளில் ஆறாத ரணம்”:

தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில் “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்” எனத் தனது உரையைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய், கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த நிகழ்வை நினைவுகூர்ந்துள்ளார். “கடந்த வருடம் இதே நாளில், என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலையாக, வேதனையான நிகழ்வு நடந்த நாளில் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம்” எனத் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல்:

தொடர்ந்து தனது பதிவில் குறிப்பிட்ட அவர், கரூரில் நடந்த அந்த அசம்பாவிதத்தில் நாம் இதயத்தில் சுமந்த சொந்தங்களை இழந்து தவித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார். “உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு ஆறுதலாக, ஆதரவாக, அரணாக நாமே இருப்போம்; நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நமது இதய அஞ்சலி” என்று மிகவும் உருக்கமாகத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பிலும், அரசின் சார்பிலும் இந்த நினைவு நாளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தொடர் ஆதரவு அளிக்கப்படும் என்பதை உணர்த்தும் வகையில் அவரது பதிவு அமைந்திருந்தது.

இதையும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?

கரூரில் நினைவு நிகழ்ச்சிகள்:

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நினைவு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள சூழலில் முதலமைச்சர் விஜய்யின் இந்த இரங்கல் செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில், அவர்களின் நினைவைப் போற்றும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சரின் இந்த உருக்கமான செய்தி சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Follow Us