AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,880 சரிவு.. ரூ.5,000 சரிந்த வெள்ளி!

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 28, 2026) கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,880 சரிவு.. ரூ.5,000 சரிந்த வெள்ளி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Sep 2026 10:50 AM IST

சென்னை, செப்டம்பர் 28 : கடந்த சில மாதங்களாக தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் (Gold), இன்று (செப்டம்பர் 28, 2026) நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. காரணம், இன்ரு ஒரு நாள் மட்டும் தங்கம் விலை (Gold Price) ரூ.1,880 சரிவை சந்தித்துள்ளது. அதுமட்டுமன்றி வெள்ளி விலையும் ரூ.5,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மீண்டும் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படும் தங்கம்

2026 ஆண்டு உச்சத்தில் இருந்த தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்திக்க தொடங்கியது. பிறகு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. உதாரணமாக ஒரு மாதம் தொடர் உயர்வை சந்திக்கும் தங்கம் அடுத்த மாதம் கடும் சரிவை சந்தித்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஒரு நாள் உயர்வு, மறு நாள் சரிவு என தங்கம் நிலையற்ற தன்மையை கொண்டு இருந்தது.

இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

தங்கம் என்னதான் நிலையற்ற தன்மையை கொண்டு இருந்தாலும், ஒரு கிராம் ரூ.14,000-க்கு கீழ் செல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சில மாதங்கள் கழித்து தற்போது தங்கம் விலை மீண்டும் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை கடும் சரிவை சந்தித்த நிலையில், வெள்ளியும் மிக கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.13,765-க்கும், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,016-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,128-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : முதலீடு எப்போது டபுள் ஆகும்.. பணத்தை இப்படி கணக்கு செய்து முதலீடு செய்யுங்கள்!

நீண்ட நாட்களாக தங்கம் விலை கிராம் ரூ.14,000 முதல் ரூ.15,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.13,000-க்கு விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us