AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

EPFO : பிஎஃப் கணக்கில் நாமினியை நியமிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?.. பணம் அரசுக்கு சென்றுவிடுமா?

What Will Happen If You Do Not Choose Nominee For Your PF Account | இபிஎஃப்ஓ அமைச்சகம் ஊழியர்களின் பெயரில் கணக்கு தொடங்கி அதில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும்.

EPFO : பிஎஃப் கணக்கில் நாமினியை நியமிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?.. பணம் அரசுக்கு சென்றுவிடுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Sep 2026 10:37 AM IST

இந்தியாவில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). காரணம், தனியார் ஊழியர்களுக்கு ஓய்வுக்கால நிதியை இந்த அமைப்பு உருவாக்கி கொடுக்கிறது. ஊழியர்கள் பணியின் இருக்கும்போது அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் சிறிய தொகை, பிற்காலத்தில் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த நிலையில், பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் நாமினியை இணைக்கப்படவில்லை என்றால் பணம் என்னவாகும், அரசுக்கு சென்றுவிடுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் ஊழியர்களின் பெயர்களின் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த பணம், ஊழியர்களின் ஓய்வுக்காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கவையாக மாற்றும் வகையில் சேமிக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களது பணி ஓய்வில் மட்டுமன்றி, பணியின்போதும் எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதி வழங்குகிறது.

இதையும் படிங்க : Gold Price : தங்கம் சவரன் ரூ.2 லட்சத்தை நெருங்கும்.. சலானி ஷாக் தகவல்!

நாமினியை தேர்வு செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

ஒருவேளை ஊழியர்களது பணி காலம் முழுவதும் பிஎஃப் பணத்தை எடுக்கமால், திடீரென உயிரிழந்துவிட்டால் அந்த பணத்தை நாமினி பெற்றுக்கொள்ளலாம். இதற்கு, ஊழியர்கள் தங்களது பிஎஃ கணக்கில் நாமினியை இணைத்திருக்க வேண்டும். ஒருவேளை ஊழியர்கள் நாமினியை இணைக்கவில்லை, அவர் திடீரென உயிரிழந்துவிட்டால் அந்த பணம் என்ன ஆகும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

இதையும் படிங்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!

ஊழியரின் இறப்புக்கு பிறகு அவரது பணம், குடும்ப உறுப்பினர்களுக்கு செல்லும் வகையில் நாமினியை தேர்வு செய்து அவரது விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இபிஎஃப்ஓ வலியுறுத்தி வருகிறது. ஒருவேளை ஊழியர், நாமினியை தேர்வு செய்யவில்லை என்றால் அந்த பணம் அரசுக்கு சென்றுவிடாது. நாமினி பதிவு செய்யப்படவில்லை என்றாலும், ஊழியர்களின் வாரிசுகள் அந்த பணத்தை பெற சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

Follow Us