வீடு கட்ட எவ்வளவு பணம் எடுக்கலாம்.. பிஎஃப் புதிய விதிகள் கூறுவது என்ன?
EPFO PF Withdrawal Rules for House | பிஎஃப் பணத்தை ஊழியர்களின் ஓய்வு காலத்திற்கானதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வைத்திருந்தாலும், பணியின்போதே சில தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதி வழங்குகிறது. இந்த நிலையில், வீடு தேவைக்காக எவ்வளவு பணத்தை எடுக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்,.
தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. இந்த சிறப்பு அம்சங்கள் ஊழியர்களின் ஓய்வு காலத்தை மையப்படுத்தியாக இருந்தாலும், ஊழியர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் பணியின்போதே சில சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் புதிய விதிகளின்படி, வீடு கட்டவோ அல்லது வாங்கவோ ஊழியர்கள் எவ்வளவு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
என்ன என்ன தேவைகளுக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்
ஊழியர்களின் ஓய்வு காலத்தை மையப்படுத்தி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் செயல்பட்டாலும், பணியின் போதே ஊழியர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. திருமணம், மருத்துவம், கல்வி, வீடு கட்டுதல் அல்லது வாங்குதல் உள்ளிட்ட சில தேவைகளுக்கு மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க இபிஎஃப்ஓ அனுமதி வழங்குகிறது.




இதையும் படிங்க : விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
75 சதவீதம் வரை பணத்தை எடுத்துக்கொள்ளலாம்
இபிஎஃப்ஓ விதிகளின்படி வீடு வாங்குவது, கட்டுவது, மனை வாங்குவது, வீட்டு கடன் செலுத்துவது, வீட்டை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக 75 சதவீதம் வரை பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த சேவையை பெற ஊழியர்கள் குறைந்தது 12 மாதங்களாவது பிஎஃப் பங்களிப்பை செய்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ள வைரம்.. காரணம் என்ன?
25% கணக்கிலேயே இருக்க வேண்டும்
உதாரணமாக, ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதில் 75 சதவீதம் அதாவது ரூ.3.75 லட்சம் பணத்தை ஊழியர்கள் முன்பணமாக பெற்றுக்கொள்ள முடியும். மீதமுள்ள 25 சதவீதம், அதாவது ரூ.1.25 லட்சம் பணம் பிஎஃப் கணக்கிலேயே இருக்க வேண்டும் என்பதை புதிய விதிகள் வலியுறுத்துகின்றன. மீதமுள்ள இந்த 25 சதவீத பணத்தை ஊழியர்கள் தங்களது ஓய்வு காலத்திற்காக விட்டுவிட வேண்டும்.
இவ்வாறு வீடு கட்டுவது, புதுப்பித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக 5 முறை ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.