பங்குச்சந்தையில் ரூ.13.9 லட்சம் ஃபோர்ட்போலியோ.. அசத்தும் 10 ஆம் வகுப்பு மாணவி!
15 Years Old Girl Built 13 Lakh Rupees Portfolio In Share Market | பங்குச்சந்தை நல்ல லாபத்தை கொடுத்தாலும், அதில் கவனமாக முதலீடு செய்யவில்லை என்றால் நஷடத்தை சந்திக்க நேரிடும். இந்த நிலையில், 15 வயதே ஆன சிறுமி ஒருவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரூ.13 லட்சம் ஃபோர்ட்போலியோவை உருவாக்கியுள்ளார்.
சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் பங்குச்சந்தை (Share Market) முதலீடு மிகவும் பிரபலமாக உள்ளது. பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், பங்குச்சந்தை மீது இருக்கும் அச்சம் அவர்களை முதலீடு செய்ய விடாமல் செய்து விடுகிறது. இந்த நிலையில் தான், 15 வயதே ஆகும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து சுமார் ரூ.13 லட்சம் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், பங்குச்சந்தையில் அசத்தும் அந்த சிறுமியின் சுவாரஸ்ய பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
பங்குச்சந்தையில் கலக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி
பெங்களூருவை சேர்ந்தவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிஞ்சனா சந்தோஷ். 15 வயதே ஆகும் இவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்து சாதனை படைத்து வருகிறார். சிஞ்சனாவுக்கு சிறு வயது முதலே பணத்தின் மீதும், சேமிப்பின் மீதும் அதிக அளவு ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக உண்டியலில் சில்லறை காசுகளை சேமிக்க தொடங்கிய அவர், தனது 12வது வயதில் சுமார் ரூ.10,000 சேமித்துள்ளார். இந்த நிலையில், தனது பெற்றோரின் உதவியுடன் அடிப்படை நிதி மேலாண்மை குறித்து தெரிந்துக்கொண்டுள்ளார். பிறகு வார இறுதி நாட்களில் சுயமாக முதலீடுகள் குறித்து படித்து தெரிந்துக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : செப் 28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. இந்த மாத சம்பளம் தாமதம் ஆகுமா?




தேர்வுகளை எழுதி சான்றிதழ்களை பெற்ற சிறுமி
சிஞ்சனா முதலீடுகள் குறித்து தெரிந்துக்கொண்டது மட்டுமன்றி, செபி மற்றும் NISM (National Institute of Securities Markets) தொடர்பான தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தான் அவர் தனது முதலீட்டு பாதையை தேர்வு செய்துள்ளார். அதாவது, ஈக்விட்டிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும், வெளிநாட்டு முதலீட்டு சந்தைகளிலும் பரவலாக பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இதையும் படிங்க : வங்கிகளில் வைப்பு தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி!
இவ்வாறு கவனமாகவும், தெளிவாகவும் முதலீடு செய்து வந்த சிஞ்சனா தற்போது சுமார் ரூ.13.9 லட்சம் மதிப்பிலான ஃபோர்ட்போலியோவை உருவாக்கியுள்ளார். சிஞ்சனா அடுத்த 7 ஆண்டுகளை மையமாக கொண்டு இந்த முதலீடுகளை செய்து வருகிறார். பெரியவர்களே பஞ்சந்தையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டும் நிலையில், இந்த சிறு வயதில் முதலீடு செய்து இத்தகைய பெரிய ஃபோர்ட்போலியோவை உருவாக்கி சிஞ்சனா சாதித்துள்ளார்.