AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்ட PF உச்ச வரம்பு.. இனி இவை எல்லாமே மாறும்!

EPFO Wage Ceiling Hiked To 25000 Rupees | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் உச்ச வரம்பை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்த உச்ச வரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்ட PF உச்ச வரம்பு.. இனி இவை எல்லாமே மாறும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Sep 2026 17:51 PM IST

கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஊழியர்களுக்கான உச்ச வரம்பை அதிரடியாக உயர்த்தியுள்ளது. 2014 செப்டம்பர் மாதம் முதல் ரூ.15,000 ஆக இருந்த உச்ச வரம்பை, இபிஎஃப்ஓ தற்போது ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சேமிப்பு, பென்ஷன் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த நிலையில், உச்ச வரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் நிகழ உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் உச்ச வரம்பை உயர்த்திய இபிஎஃப்ஓ – இனிமே ரூ.25,000

சுமார் 12 ஆண்டுகளாக பிஎஃப் உச்ச வரம்பு ரூ.15,000 ஆக மட்டுமே இருந்த நிலையில், அது தற்போது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டாய இபிஎஃப்ஓ வரம்புக்கு வெளியே இருந்தவர்கள் இனி கட்டாயம் இபிஎஃப்ஓ வரம்புக்கு உள்ளே வருவார்கள். இதன் மூலம் ஊழியர்களுக்கு பிஎஃப் சேமிப்பு, ஈபிஎஸ் பென்ஷன் பாதுகாப்பு மற்றும் EDLI காப்பீடு போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் சட்டப்பூர்வமாக கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இவர்கள் அக்டோபர் 1 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!

1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பலன் அடைவார்கள்

பிஎஃப் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 51 லட்சம் முதல் 1 கோடி வரை ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக ஊழியர்களின் மாதாந்திர பங்களிப்பும் கனிசமாக உயரும். முன்பு உச்ச வரம்பு ரூ.15,000 ஆக இருந்த நிலையில், அதில் 12 சதவீதம் என்றால் தலா ரூ.1,800 நிறுவனம் மற்றும் ஊழியர் சார்பில் பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க : வீட்டுக் கடன் Vs சொத்துக் கடன்.. இரண்டில் எது சிறந்தது?..உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்!

தற்போது உச்ச வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 12 சதவீதம் பங்களிப்பு என கணக்கிடப்பட்டால் பங்களிப்பு ரூ.3,000 ஆக உயரும். அதாவது, ஊழியர் மற்றும் நிறுவனம் சார்பில் ரூ.3,000 பங்களிப்பு செலுத்த வேண்டும். இதன் மூலம் ஊழியர் மற்றும் நிறுவனம் சார்பில் தலா ரூ.1,200 அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us