விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
India's UPI MDR Charges | இந்தியாவில் அக்டோபர் 15, 2026 முதல் எம்டிஆர் கட்டணம் அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டணம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், எம்டிஆர் கட்டணம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருப்பது எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணம் தான். இந்த எம்டிஆர் கட்டண முறை தொடர்பான அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் குழப்பத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுமா, சிறு வணிகர்களுக்கும் பொருந்துமா, மறைமுக கட்டணம் விதிக்கப்படுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், எம்டிஆர் கட்டண முறை குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
எம்டிஆர் கட்டணம் என்றால் என்ன?
வாடிக்கையாளர்களிடம் இருந்து வணிகர்கள் பெறும் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனைகளுக்காக யுபிஐ தளங்களான கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pay) உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் வணிகர்கள் செலுத்தும் கட்டணம் தான் எம்டிஆர். இந்த கட்டணம் முழுவதும் வணிகர்களுக்கானது. இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமாக வசூல் செய்யக்கூடாது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : டிசம்பருக்குள் RBI, 2 முறை ரெப்போ வட்டியை உயர்த்த வாய்ப்பு.. வெளியாக முக்கிய தகவல்!
எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்
வாடிக்கையாளர்களிடம் இருந்து யுபிஐ மூலம் வணிகர்கள் பெறும் ரூ.2,000-க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் எம்டிஆர் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே, வாடிக்கையாளர் ரூ.2,000-க்கும் குறைவாக பண பரிவர்த்தனை செய்கிறார் என்றால் அதற்கு வணிகர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சிறு வணிகர்களுக்கும் பொருந்துமா?
மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் பணம் பெறும் தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு இந்த எம்டிஆர் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களுக்கு எம்டிஆர் பொருந்தும்.
இதையும் படிங்க : வெள்ளைக்குதிரை.. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 புதிய மாடல்.. புதிய அம்சங்கள் என்னென்ன?
எம்டிஆர் கட்டண விவரம்
ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு ரூ.300 கட்டணம் என உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே, தொலைத்தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீடு மற்றும் மின்சாரம், நீர் கட்டணங்களுக்கு 0.4 சதவீதத்திற்கு பதிலாக ரூ.5 என்ற நிலையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல பங்குச்சந்தை (Share Market) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீடுகளுக்கு 0.02 சதவீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



