AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!

RBI May Hike Repo Rate | ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்தும் ஆர்பிஐ, அந்த வகையில் அக்டோபர் 05,06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் ஆர்பிஐ கொள்கை குழு கூட்டம் நடத்த உள்ளது.

வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Sep 2026 19:54 PM IST

அக்டோபர் 05, 06, 07 ஆகிய தேதிகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank Of India) நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக தனிநபர் கடன், வீட்டுக் கடன் மற்றும் தங்க நகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்பிஐ ரெப்போ வட்டியை உயர்த்துவது குறித்தும் அதன் மூலம் ஏற்படக்கூடிய முக்கிய மாற்றங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

ஆர்பிஐயின் நிதி கொள்கை குழு கூட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்தும். இந்த கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், அக்டோபர் 05, 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் ஆர்பிஐ தனது நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்த உள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் பண வீக்கம் குறைவாக இருந்ததன் காரணமாக ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்து வந்தது. ஆனால், தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Gold Price : 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?

ரெப்போ வட்டி உயர்ந்தால் என்ன ஆகும்?

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன் விகிதம் தான் ரெப்போ வட்டி. இந்த ரெப்போ வட்டி குறைவாக இருக்கும்போது வங்கிகள் தனது கடன் திட்டங்களுக்கான வட்டியை குறைவாக வைத்திருக்கும். இதுவே, ரெப்போ வட்டியை ஆர்பிஐ உயர்த்தும்போது வங்கிகள் தங்களது கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும்.

இதையும் படிங்க : பிஎஃப் விதிகள்: வீடு கட்ட, கடன் செலுத்த பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?

கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயரும்

இந்திய ரிசர்வ் வங்கி 2026 ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இரண்டு முறை அதாவது 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தனிநபர் கடன், வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதங்கள் கனிசமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us