Gold Price : 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?
Gold and Silver Price In Chennai On September 25th 2026| தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று 4 நாட்களுக்கு பிறகு உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 25 : தங்கம் விலை (Gold Price) ஒவ்வொரு நாளும் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதாவது, ஒரு நாள் உயர்வை சந்திக்கும் தங்கம், மறு நாள் கடும் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் இன்று (செப்டம்பர் 25, 2026) உயர்வை சந்தித்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை
தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. புவிசார் பதற்றம், பங்குச்சந்தை, தங்கத்தின் தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றை மையமாக கொண்டுதான் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. ஒருநாள் உயர்வை சந்திக்கும் தங்கம், மறுநாள் கடும் சரிவை சந்திக்கிறது. இத்தகைய தொடர் ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 25, 2026) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப்டம்பர் 25, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.14,010-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,284-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ள வைரம்.. காரணம் என்ன?
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் இத்தைய தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா, இல்லையா என்று கடும் குழப்பமடைந்து வருகின்றனர்.