இன்று, ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் வங்கிகள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அடுத்த 3 நாட்களுக்கு சிக்கல்!
Public Sector Banks Open Sunday September 27, 2026 | இந்தியாவில் நாளை (செப்டம்பர் 28, 2026) முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், இன்று (செப்டம்பர் 27, 2026) பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகள் வழக்கம் போல செயல்படுகின்றன.
இந்தியாவை பொருத்தவரை ஞாயிற்று கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஞாயிற்று கிழமை மட்டுமன்றி, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், இந்த வாரம் ஞாயிற்று கிழமையான இன்று (செப்டமர் 27, 2026) பொதுத்துறை வங்கிகள் (Public Sector Banks) மற்றும் கிராம வங்கிகள் (Rural Banks) செயல்படுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. அதனை தெரிந்துக்கொண்டு உங்களது வங்கி தேவைகளை இன்றே பூர்த்தி செய்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று வங்கிகள் இயங்குவதன் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கிகள் வழக்கம் போல செயல்படும்
இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை உள்ளது. வார விடுமுறையை தொடர்ந்து யுனைடட் ஃபோரம் பேங்க் யூனியன் (UFBU – United Forum Of Banks Union) மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத சூழல் உருவானது.
இதையும் படிங்க : அக்டோபர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!




இந்த நிலையில் தான், இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் கிராம் வங்கிகள் ஞாயிற்றுக் கிழமையான இன்று செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகள் இன்று வழக்கம் போல இயங்குகின்றன.
அடுத்த மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது
என்னதான் ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் இன்று (செப்டம்பர் 27, 2026) வங்கிகள் செயல்படும் நிலையில், நாளை (செப்டம்பர் 28, 2026) முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது. அதாவது, அடுத்த மூன்று நாட்களுக்கு பொதுமக்களால் வங்கிகளில் மட்டுமே கிடைக்கும் சேவைகளை பெற முடியாத சூழல் உள்ளது.
இதையும் படிங்க : Gold Price : தங்கம் சவரன் ரூ.2 லட்சத்தை நெருங்கும்.. சலானி ஷாக் தகவல்!
எனவே, அடுத்த மூன்று நாட்களில் வங்கி சேவை தேவைப்படும் பொதுமக்கள், இன்றே வங்கிகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.