AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அக்டோபர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

October 2026 Bank Holidays | ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Sep 2026 12:43 PM IST

ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை, வார விடுமுறை, உள்ளூர் விடுமுறைகள் ஆகியவற்றின் காரணமாக வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் 2026, அக்டோபர் மாதம் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் 2026 – 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

அக்டோபர் மாதத்தில் மொத்த 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியல் இதோ.

  • அக்டோபர் 02, 2026 : காந்தி ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 04, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 10, 2026 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 11, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 17, 2026 – மகா சப்தமி என்பதால் அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 18, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 19, 2026 – மகா அஷ்டமி என்பதால் சில மாநிலங்களின் அறைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை.
  • அக்டோபர் 20, 2026 – விஜயதசமி என்பதால் அன்றைய தினம் சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 21, 2026 – துர்கா பூஜை என்பதால் அன்றைய தினம் சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 24, 2026 – மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 25, 2026 – ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 26, 2026 – லட்சுமி பூஜை என்பதால் அன்றைய தினம் சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 29, 2026 – கரக்க சதுர்த்தி என்பதால் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சேமிப்புக்கு இன்னுமா 50:30:20 ஃபார்முலா பயன்படுத்துறீங்க.. நிபுணர்கள் கூறும் இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 14 நாட்கள் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us