AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெற்றோர்களே.. பால் ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய செப்.30 தான் கடைசி தேதி!

Free Bal Aadhaar Biometric Update for Children | பால் ஆதார் கார்டில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். இந்த விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய அக்டோபர் 30, 2026 தான் கடைசி தேதியாக உள்ளது.

பெற்றோர்களே.. பால் ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய செப்.30 தான் கடைசி தேதி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Sep 2026 23:41 PM IST

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளதுதான் ஆதார் கார்டு (Aadhaar Card). ஆதார் கார்டு இல்லை என்றால் பல்வேறு வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் முதியவர்கள் ஓய்வூதியம் பெறுவது வரை என அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், குழந்தைகளுக்கான ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய செப்டம்பர் 30, 2026 கடைசி தேதி என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) கூறியுள்ளது. இந்த நிலையில், பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய கடைசி விரைவில் முடிவடைய உள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பால் ஆதார் – பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்படும். இந்த ஆதார் கார்டில் குழந்தைகளின் கைரேகை பதிவு, கண் கருவிழி படலம் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் இருக்காது. இந்த நிலையில் தான், 5 வயதுக்கு பிறகு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், பால் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வது தொடர்பான ஒரு முக்கிய செய்து உள்ளது.

இதையும் படிங்க : இன்று, ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் வங்கிகள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அடுத்த 3 நாட்களுக்கு சிக்கல்!

செப்டம்பர் 30 தான் கடைசி தேதி

பால் ஆதாரில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய செப்டம்பர் 30, 2026 தான் கடைசி தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க : செம ஸ்ட்ராங்கா? 20 டன் கற்களை தாங்கிய டாடா ஏரிஸ் கார்.. கவனிக்க வேண்டியது என்ன?

பிள்ளைகளின் உயர்கல்வி உள்ளிட்டவற்றுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us