AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அஞ்சலக RD திட்டம்.. மாத தவணைகளை தவறவிட்டால் என்ன ஆகும்?

Post Office RD Scheme Rules | அஞ்சலகங்கள் மூலம் அரசு தொடர் வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள் ஒரு மாத தவணை மிஸ் செய்தால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Sep 2026 11:58 AM IST
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்தால் தான் பொருளாதார பாதுகாப்பை பெற முடியும். இவ்வாறு பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய அரசு, அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தொடர் வைப்பு நிதி திட்டம். 

1 / 5
இந்த திட்டத்தில் நிலையான வைப்பு நிதி திட்டத்தை போல மொத்தமாக பணத்தை செலுத்திவிட்டு அதற்கான வட்டியை மாதம் மாதம் பெற முடியாது. ஆனால், மாதம் மாதம் சிறிய தொகையை செலுத்தி நல்ல லாபத்தை பெற முடியும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 

2 / 5
இந்த திட்டத்தில் குறைந்தது ரூ.100 முதல் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முறையாக முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மாத தவணையை செலுத்த தவறிவிட்டால் என்ன ஆகும் என குழப்பம் பலருக்கும் உள்ளது.

3 / 5
அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு வைத்துள்ள நபர், தொடர்ந்து பல மாதங்கள் முதலீடு செய்யாமல் இருந்தால் அந்த நபரின் கணக்கு Irregular கணக்காக வைக்கப்படும். அதுமட்டுமன்றி, இவ்வாறு கணக்கில் மாதம் மாதம் பணம் வரவு வைக்கப்படுவது தவிர்க்கப்படும் பட்சத்தில் இறுதியில் கணக்கு மூடப்படும் வாய்ப்பும் உள்ளது.

4 / 5
இதுவே தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் ஒரு மாதம் முதலீடு செய்ய தவறினால் பெரிய அளவில் மாற்றம் எதுவும் நடக்காது. அதாவது, ஒருவர் ஒரு மாதம் முதலீட்டை தவறவிடும் பட்சத்தில் அதற்கு அவர் ரூ.1.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us