AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : 2வது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. மீண்டும் சரிந்தது.. இன்றைய நிலவரம்!

Gold and Silver Price In Chennai On September 29, 2026 | தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 29, 2026) இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Gold Price : 2வது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. மீண்டும் சரிந்தது.. இன்றைய நிலவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Sep 2026 10:45 AM IST

சென்னை, செப்டம்பர் 29 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) இரண்டாவது நாளாக நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது, தங்கம் விலை இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. தங்கம் ரூ.200 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை (Silver Price) ரூ.5,000 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் – நகைப் பிரியர்கள் குஷி

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும். அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதாவது ஒரு நாள் உயர்வை சந்திக்கும் தங்கம், மறுநாள் கடும் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து குழப்பத்தை ஏற்படுத்தி வந்த தங்கம், கடந்த இரண்டு நாட்களாக தொடர் சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : இபிஎஃப்ஓ முகாம்.. சிக்கல்களுக்கு உடனடி தீர்வு.. மிஸ் பண்ணீடாதீங்க!

ஒரே நாளில் இரண்டு முறை சரிந்த தங்கம் விலை

நேற்று (செப்டம்பர் 28, 2026) தங்கம் விலை இரண்டு முறை சரிவை சந்தித்தது. அதாவது, 22 காரட் தங்கம் காலையில் கிராமுக்கு ரூ.235 சரிந்து ஒரு கிராம் ரூ.13,765-க்கும், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் தங்கம் விலை மீண்டும் சரிந்தது. அதாவது கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,665-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : Gold Price : மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,880 சரிவு.. ரூ.5,000 சரிந்த வெள்ளி!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (செப்டம்பர் 29, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.13,640-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us