கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் மாற்றம் செய்யலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Teared Rupee Notes Exchange In Banks | பலரும் ரூபாய் நோட்டுகள் கிழிந்துவிட்டால் அவற்றுக்கு மதிப்பு இல்லை என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய மற்றும் நல்ல ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய ரூபாய் நோட்டுக்கள் (Indian Rupees Notes) காகிதத்தால் செய்யப்பட்டவை. இதன் காரணமாக அது மிக எளிதாக கிழிந்துவிடும் தன்மையை கொண்டுள்ளது. தண்ணீர், நீர் என எதில் பட்டாலும் இந்திய ரூபாய் நோட்டுகள் பாழாகிவிடும். சற்று கடினமாக கையாண்டாலோ அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் என்றாலோ மிக எளிதில் கிழிந்துவிடும். ரூபாய் நோட்டுக்கள் கிழிந்தாலும் அதற்கு மதிப்பு உண்டு. இந்த நிலையில், கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் கொடுத்து மாற்றலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் மாற்றுவது?
உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அது குறித்து கவலைப்பட வேண்டாம். அவற்றை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) சில விதிகளை வகுத்துள்ளது. அதனை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. கிழிந்த ரூபாய் நோட்டை திரும்ப பெறும் விதிகள் 2009-ன் கீழ் ஒருவர், கிழிந்த ரூபாய் நோட்டை கொடுத்தால் வங்கியின் சார்பில் அதனை கட்டாயம் மாற்றி தர வேண்டும்.
இதையும் படிங்க : தஞ்சையில் நம்மாழ்வார் பெயரில் கல்லூரி.. விவசாயிகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள்!
கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு செல்ல வேண்டுமா?
பெரும்பாலான நபர்கள் தங்களிடம் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அவற்றை தாங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு சென்றால் மட்டுமே மாற்ற முடியும் என நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி அல்ல. எந்த ஒரு வங்கி கிளைக்கும் சென்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அனுமதி உள்ளது. இவ்வாறு கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளிடம் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெற எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது.
இதையும் படிங்க : விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!
எனவே உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதனை வீண் என நினைத்து கீழே தூக்கிப்போடாமல் அதனை வங்கியில் கொடுத்து மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.