ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!
Reserve Bank Of India Kept Repo Rate Remain Unchanged | ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்பிஐ கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) குறித்த அறிவிப்பை வெளியிடும். ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் நடைபெறும் நிலையில், அந்த கூட்டத்திற்கு பிறகு ஆர்பிஐ கவர்னர் ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார். அந்த வகையில், இந்த இரண்டு மாதங்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருப்பதாக ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமல் உள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே தொடரும் என அவர் கூறியுள்ளார். நாட்டின் பணவீக்கம் டார்கெட் அளவை விட அதிகமாக உள்ளது. பணவீக்கம் அளவு 4 சதவீதத்திற்கு மேல் உள்ளதற்கு முக்கிய காரணம் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு தான் என்று கூறியுள்ள அவர், கோர் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம். இந்த வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படும்போது, வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன் மற்றும் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யும். அதாவது, ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் கடன்களுக்கான மற்றும் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயரும். இதுவே, ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் கடன்களுக்கான மற்றும் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறையும். தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.