தினம் ரூ.166 முதலீடு செய்தால் போதும்.. ரூ.16.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?
Public Provident Fund Scheme Investment | அரசு அன்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிபிஎஃப் திட்டத்தில் தினமும் ரூ.166 முதலீடு செய்து ரூ.16.26 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்யும் பட்சத்தில் தான் நிதி பாதுகாப்பு பெற முடியும். இதற்காக தான் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், தாங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்று தெரியாமல் பலரும் பயத்திலேயே சேமிப்பு அல்லது முதலீடு செய்வதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால், அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தும் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் அது குறித்து கவலைப்பட தேவையில்லை.
காரணம் அரசின் திட்டங்கள் நிதி பாதுகாப்புடன் சிறந்த வருமானத்தை தரும். எனவே அத்தகைய திட்டம் ஒன்றில் தினமும் ரூ.166 முதலீடு செய்து ரூ.16.27 லட்சம் லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund). இந்த திட்டம் 1986 முதலே செயல்பாட்டில் உள்ளது. கூட்டு வட்டி என்ற சிறப்பு அம்சம் இதில் உள்ளதன் காரணமாக முதலீடு செய்வதன் மூலம் இந்த திட்டத்தில் இருந்து நல்ல லாபத்தை பெற முடியும். அதாவது, முதலீடு செய்த தொகைக்கு வட்டி வழங்கப்படும் நிலையில், அடுத்த முறை அந்த வட்டிக்கும் சேர்த்து வட்டி வழங்கப்படும். அதுதான் கூட்டு வட்டி.




இதையும் படிங்க : இந்த விஷயங்களுக்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் பிடிக்க முடியாது.. முழு விவரம்!
ரூ.166 முதலீடு செய்து ரூ.16.27 லட்சம் முதலீடு செய்யலாம்
இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் தினமும் ரூ.166 முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, மாதம் ரூ.5,000 சேமிக்கும் பட்சத்தில் ஒரு வருடத்திற்கு ரூ.60,000 முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செய்யும் பட்சத்தில் மொத்தமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்துவிடலாம்.
இதையும் படிங்க : KYC-ஐ முடிக்காவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது – எப்படி செய்வது?
இந்த முதலீட்டு ரூ.7.27 லட்சம் வட்டி மட்டுமே கிடைக்கும். அதன்படி, இந்த திட்டம் முடியும்போது முதலீடு மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.16.27 லட்சம் பெறலாம் என்பது குறிப்பிட்டத்தக்கது.