AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த விஷயங்களுக்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் பிடிக்க முடியாது.. முழு விவரம்!

House Advance Amount Reduction | வீட்டு உரிமையாளர்கள் அட்வான்ஸ் தொகையை பல்வேறு காரணங்களுக்காக பிடித்தம் செய்கின்றனர். இந்த நிலையில், வீட்டு உரிமையாளர்கள் இந்த சில காரணங்களுக்காக அட்வான்ஸ் தொகையை பிடித்தம் செய்ய முடியாது. அவை என்ன என்ன காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த விஷயங்களுக்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் பிடிக்க முடியாது.. முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Aug 2026 01:25 AM IST

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் பிரதான தொழிலாக உள்ளது வாடகை விடுவதுதான். கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுகின்றனர். அவ்வாறு நகர்ப்புறங்களில் குடியேறும் அவர்கள், தாங்கள் தற்காலிகமாக வசிக்க வாடகை வீடுகளில் குடி புகுகின்றனர். அவ்வாறு வாடகை வீட்டில் இருக்கும் பொதுமக்கள் ஏராளமான சிரமங்களை சந்திக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக வீட்டை காலி செய்யும்போது தாங்கள் வழங்கிய அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற படாத பாடு படுகின்றனர். இந்த நிலையில் தான், நீதிமன்றம் அது குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அட்வான்ஸ் தொகையில் முறைகேடு செய்யும் வீட்டு உரிமையாளர்கள்

வாடகை வீட்டில் குடியிருக்கும் நபர்கள் அந்த வீட்டை காலி செய்யும்போது, வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு காரணங்களை கூறி அட்வான்ஸ் தொகையை பிடித்தம் செய்துக்கொள்வர். இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தாங்கம் செலுத்திய டெபாசிட் தொகையில் இருந்து, பாதி அளவு தொகையை கூட பெற முடியாத சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இனி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? பிசிஐ விளக்கம்

நீதிமன்ற தீர்ப்பில் முக்கிய உத்தரவுகள்

ஒரு வீட்டை காலி செய்யும்போது சுவறில் பெயிண்ட் மங்கியிருப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றுக்கு வீட்டு ஓனர்கள் பணத்தை பிடித்தம் செய்யக்கூடாது. இவை அனைத்தும் வீட்டை பயன்படுத்தும்போது இயற்கையாக நடைபெறும் Wear and Tear விஷயம் ஆகும். இதற்கு வீட்டின் உரிமையாளர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us