AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!

Artificial Intelligence Will Decide Providing Loan | தற்போது வங்கிகளின் கடன் பெற வேண்டும் என்றால் சில அடிப்படை தகுதிகளை கொண்டு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அவற்றை பார்த்து தான் வங்கிகள் கடன் வழங்கும். ஆனால், இனி ஏஐ தான் கடனை தீர்மானிக்கப்போகிறது என ஆர்பிஐ கவர்னர் கூறியுள்ளார்.

இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Aug 2026 14:02 PM IST

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு பண தேவை ஏற்படும்போது வங்கிகளை நாடுகின்றனர். இதற்காக வங்கிகள் தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. இவ்வாறு வங்கிகளில் கடன் பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. கடனுக்கு விண்ணப்பிக்கும் நபரிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா, அவரது கடன் வரலாறு முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகுதான் வங்கிகள் கடன் வழங்கும்.

இந்த நிலையில், இனி கடன் வழங்குவதை ஏஐ (AI – Artificial Intelligence) தான் தீர்மானிக்கப்போகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கி கடன் வழங்குவதை முடிவு செய்யும் ஏஐ

மும்பையில் நடைபெற்ற தேசிய வங்கி மாநாட்டில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பங்கேற்று பேசினார். அப்போது கூறிய அவர், தற்போது பலருக்கும் முறையான கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் வரலாறு இல்லாததன் காரணமாக வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது கடினமாக உள்ளது. இந்த சிக்கலை சரிசெய்ய செயற்கை நுண்ணறிவு அம்சம் உதவி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : தினம் ரூ.166 முதலீடு செய்தால் போதும்.. ரூ.16.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?

ஏஐ மூலம் எளிதாக வங்கி கடன் பெற முடியும்

தற்போதைய நிலவரப்படி ஒரு நபர் ஏற்கனவே வாங்கிய கடன்கள், கிரெடிட் கார்டு ஆகியவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு அடுத்த கடன் வழங்கப்படுகிறது. இதனால், இதுவரை கடனே வாங்காத நபர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இல்லை என கூறி வங்கிக் கடன் வழங்க மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் தான், வங்கிகளுக்கு செயற்கை நுண்ணறிவு அம்சம் உதவி செய்ய உள்ளது.

இதையும் படிங்க : அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!

அதாவது ஒருவர் ஜிஎஸ்டி தாக்கல் செய்த விவரங்கள், அவரது பண புழக்கம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்திய விவரங்கள் மற்றும் தரவுகளை பயன்படுத்தி கடன் பெற தகுதியான புதிய நபர்களை அடையாளம் காண வங்கிகளுக்கு ஏஐ உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us