SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?
Sukanya Samriddhi Yojana Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மூத்த குடிமக்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் தனித்தனி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் குழந்தைகளுக்காக அரசு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தி வரும் திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதற்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) என பெயர்.
இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
முழுக்க முழுக்க பெண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சலங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் முதலீட்டு திட்டமாக இது உள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு 10 வயது நிறைவடைவதற்குள் கணக்கு தொடங்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.




இதையும் படிங்க : லோன் வாங்கி கார் வாங்க போறீங்களா?.. இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
ரூ.28 லட்சம் நிதியை உருவாக்குவது எப்படி?
இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.5,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களால் ஆண்டுக்கு ரூ.60,000 முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாக இருந்தாலும், 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்வதே போதுமானதாக உள்ளது. அவ்வாறு 15 ஆண்டுகள், ஆண்டுக்கு ரூ.60,000 என முதலீடு செய்தால் மொத்தமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள்.
இதையும் படிங்க : 5 கிலோ கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி.. என்ன என்ன ஆவணங்கள் தேவை?
நீங்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்ய வேண்டாம். ஆனால், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு அடுத்த 6 ஆண்டுகளுக்கு வட்டி வழங்கப்படும். உதாரணமாக 15 ஆண்டுகளில் நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்துள்ளீர்கள் என்றால் அதற்கான வட்டியாக மட்டும் ரூ.19,72,848 கிடைக்கும். இதன் மூலம் திட்டத்தின் முடிவில் நீங்கள் மொத்தமாக ரூ.28,72,848 பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.