AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் – ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்

SBI Savings Scheme : ஸ்டேட் வங்கியின் ஹர் கர் லக்பதி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி,குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்கலாம். வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான தேர்வு காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் – ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Aug 2026 16:18 PM IST

மாதம் சிறிய தொகையாக சேமித்து எதிர்காலத்தில் மிகப்பெரிய லாபம் பெற நினைப்பவர்களுக்கு இந்திய ஸ்டேட் வங்கி பஹ் கர் லக்பதி என்ற தொடர் வைப்பு திட்டத்தை வழங்குகிறது. குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால நிதி தேவைகளுக்கு திட்டமிட்டு சேமிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய ஸ்டேட் வங்கி ஹர் கர் லக்பதி (Har Ghar Lakhpati) என்ற தொடர் வைப்பு நிதி திட்டம் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலத்தில் மிகப்பெரிய லாபம் தரும் திட்டமாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி,குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்கலாம். வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான தேர்வு காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது திட்டத்தின் முடிவில் எவ்வளவு தொகையை பெற வேண்டும் என்பதை திட்டமிட்டு அதற்கு ஏற்ப சேமிப்பு காலத்தை முடிவு செய்துகொள்ளலாம்.

இதையும் படிக்க : ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!

யாரெல்லாம் கணக்கு தொடங்கலாம்?

இந்தத் திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் தனிநபராகவும் அல்லது தனது மனைவி அல்லது குடும்பத்தில் ஒருவருடன் இணைந்து தொடங்கலாம். மேலும் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகள் தங்களது பெயரில் கணக்கு தொடங்கலாம். அதற்கு குறைவான குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் கணக்கு தொடங்க முடியும். இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தில் உயர்கல்வி செலவுகளுக்கு இப்போது இருந்தே சேமிக்க முடியும்.

ரூ.1 லட்சம் பெற மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்?

இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் என்ற இலக்கை அடைய விரும்புகிறவர்களுக்கு காலத்தை பொறுத்து மாதம் செலுத்த வேண்டிய தொகையும் மாறுபடும். குறிப்பாக இந்த திட்டத்தில் 8 சதவிகித வருமானம் கிடைக்கும் என வைத்துக்கொண்டால் அதற்கு ஏற்ப மாதம் கால அளவை பொறுத்து மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என பார்க்கலாம்.

இதையும் படிக்க : SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?

  • உதாரணமாக 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் பெற வேண்டும் என்றால் மாதம் ரூ.2,510 செலுத்த வேண்டும்.
  • அதே போல 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் என்ற இலக்கை அடைய மாதம் ரூ.1.420 சேமிக்க வேண்டும்.
  • மேலும் 10 ஆண்டுகளில் 1 லட்சம் பெற வேண்டும் என்றால் மாதம் ரூ.610 செலுத்த வேண்டும்.

அதாவது நீண்ட காலத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் செலுத்த வேண்டிய தொகையும் குறையும். நம் மாத வருமானம், வீட்டுக்கு ஆகும் செலவுகள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு நம்மால் மாதம் எவ்வளவு மிச்சமாகும் என்பதற்கு திட்டத்தின் கால அளவை தேர்ந்தெடுக்கலாம்.

Follow Us