AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி போட முடியாது.. செக் வைத்த ஆர்பிஐ!

RBI Planning New Rules For Banks | இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் வட்டி விகிதம் குறித்த புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

இனி வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி போட முடியாது.. செக் வைத்த ஆர்பிஐ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Aug 2026 18:12 PM IST

வங்கிகள் மற்றும் கடன் விதிகள் தொடர்பான பல்வேறு முக்கிய மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஒரு புதிய விதிமுறையை அறிமுகம் செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தெளிவான மற்றும் வெளிப்படையான வட்டி முறையை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும் என்பதை ஆர்பிஐ வலியுறுத்துகிறது. இந்த நிலையில், வங்கிகளில் வட்டி விகிதம் தொடர்பாக ஆர்பிஐ அறிமுகம் செய்ய உள்ள முக்கிய விதி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்

தற்போது வங்கிகள் இரண்டு முறைகளில் வட்டி வசூல் செய்கின்றன. ஒன்று நிலையான வட்டி (Fixed Interest Rate) மற்றொன்று ஃப்ளோடிங் வட்டி (Floating Interest Rate). நிலையான வட்டி என்பது, வாடிக்கையாளர்கள் வங்கி கடன் வாங்கியது முதல், அதனை முழுமையாக திருப்பி செலுத்துவதை ஒரே வட்டி விகிதத்தை கடைபிடிப்பது ஆகும். இதுவே ஃப்ளோடிங் வட்டி முறை என்றால் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை மாற்றம் செய்யும் பட்சத்தில் வங்கி கடனுக்கான வட்டியில் மாற்றம் ஏற்படும்.

இதையும் படிங்க : 5 கிலோ கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி.. என்ன என்ன ஆவணங்கள் தேவை?

கடன் வாங்கும் நபர்கள், தாங்கள் எவ்வளவு கடன் பெறுகிறோம், எவ்வளவு வட்டி செலுத்துகிறோம் என்பதை வங்கிகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும், அதேபோல வங்கிகளும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வட்டியில் மாற்றத்தை மேற்கொள்ளாமல் ஆர்பிஐ-ன் விதிமுறையின் கீழ் வட்டியை கடைபிடிக்க வேண்டும் என்றும், ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படும்போதெல்லாம் அதனுடைய பலன் உடனடியாக பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முக்கிய விதியை அறிமுகம் செய்ய உள்ளது.

வங்கிகள் என்ன செய்ய வேண்டும்?

ஆர்பிஐ-ன் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு வங்கியும் வட்டி தொடர்பான ஒரு பாலிசியை உருவாக்கி அந்த அந்த நிர்வாக குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதனை ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்து ஒப்புதல் பெற வேண்டும். பிக்சட் வட்டி மற்றும் ஃப்ளோடிங் வட்டி எதுவாக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள பென்ச்மார்க் விகிதத்தின் கீழ் எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் கடன் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த புதிய விதி இருக்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us