AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!

KYC Mandatory For Gas Cylinder and Subsidy | இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பங்கள் கேஸ் சிலிண்டர் இணைப்பை வைத்துள்ளனர். இந்த நிலையில், கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் ஆகஸ்ட் 16-ல் இருந்து இருந்து கேஸ் சிலிண்டர் மற்றும் மானியம் கிடைக்காது என கூறப்படுகிறது.

இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Aug 2026 13:53 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து குடும்பங்களிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் (LPG Gas Cylinders) பயன்படுத்தப்படுகிறது. அரசின் திட்டங்கள் மூலம் பெரிய நகரங்கள் மட்டுமன்றி, கடைகோடி கிராமங்கள் வரை இந்த கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான், ஆகஸ்ட் 15, 2026-க்குள் இதனை செய்து முடிக்கவில்லை என்றால், தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெற முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர்களுக்கு கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் உஜ்வாலா திட்டம் மற்றும் வழக்கமான கேஸ் இணைப்புகள் மூலம், கோடிக்கணக்கான குடும்பங்கள் கேஸ் சிலிண்டர்களை பெற்று வருகின்றனர். 2026, மார்ச் மாதம் ஈரான் போர் காரணமாக இந்தியாவில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. தற்போது ஈரான் போரின் பதற்றம் ஓய்ந்து, நிலமை சீராக இருந்தாலும் கேஸ் சிலிண்டர்களை பெற கேஒய்சி மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக்.. ரூ.299 உள்ளிட்ட 4 ரீசார்ஜ் திட்டங்கள் திடீர் நீக்கம்!

ஆகஸ்ட் 15-க்குள் முடிக்கவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் இல்லை

வீட்டு உபயோகத்திற்காக கேஸ் சிலிண்டர் பெற்றுள்ள அனைவரும், தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெற வேண்டும் என்றால் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 15, 2026 தான் கடைசி தேதியாக உள்ளது. ஒருவேளை எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயனர்கள் ஆகஸ்ட் 15, 2026-க்குள் கேஸ் சிலிண்டர்களுக்கான கேஒய்சி (KYC – Know Your Customer) மேற்கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெறுவது மற்றும் மானியம் பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இதையும் படிங்க : இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.300 என்ற அளவில் மானியம் வழங்கப்படும் நிலையில், கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் அந்த மானியம் கிடைக்காமல் போகலாம். எனவே, பயனர்கள் தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெற வேண்டும் அல்லது கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் பெற வேண்டும் என்றால் கட்டாயம் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us