Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாறாத ரெப்போ விகிதம் – ஹோம் லோன் பெற்றவர்களுக்கு பாதிப்பா?

RBI Keeps Rate Steady : சமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடந்த பணவியல் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனையடுத்து ஹோம் லோன் பெற்றவர்களுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து பார்க்கலாம்.

மாறாத ரெப்போ விகிதம் – ஹோம் லோன் பெற்றவர்களுக்கு பாதிப்பா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Aug 2025 16:39 PM

இந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee) சந்திப்பு ஆகஸ்ட் 6, 2025 அன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் (Repo Rate)எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனையடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதம் என்ற நிலையில் மாற்றமின்றி தொடரும். கடந்த பிப்ரவரி முதல் ஜூன், 2025 வரை மொத்தம் 100 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6.5 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவகிதமாக குறைக்கப்பட்டது. கடந்த ஜூலை, 2025 நிலவரப்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, கனரா வங்கி போன்றவை வீட்டுக் கட் வட்டி விகிதத்தை 7.3 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரை வீட்டு கடன் (Home Loan) வட்டி விகிதங்களை நிர்ணயித்திருந்தது குறிப்படத்தக்கது. தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி  ஃபுளோட்டிங் ரேட் வகை வீட்டு கடன்களுக்கு ரெப்போ விகிதத்துடன் வெளிப்படையாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள், லோன் வாங்கியுள்ளவர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிக்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. 5.5% ஆகவே தொடரும்.. ஆர்பிஐ அறிவிப்பு!

ஹோம் லோனில்  தாக்கத்தை ஏற்படுத்துமா?

ரெப்போ விகிதம் இருப்பதால் மாற்றம் இல்லாத காரணத்தால்,  ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பொதுவாக ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் இஎம்ஐ-யைக் குறைக்காமல், கடன் செலுத்தும் காலத்தை மட்டும் குறைக்கும் முறையை தேர்வு செய்கின்றன. அதே நேரம் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் கடன் வாங்கியவர்களுக்கு இஎம்ஐ அதிகரிக்கலாமா அல்லது கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்கலாமா என்ற ஆப்சனை வழங்குகிறது.

ஃப்ளோட்டிங் வட்டி (Floating Rate) அதாவது மாறும் வட்டி அடிப்படையில் ஹோம் லோன் வாங்கியவர்கள், தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதால் தற்போது இஎம்ஐ (EMI), கடன் செலுத்தும் கால அளவில் எந்த மாற்றமும் செய்யப்படாது.

இதையும் படிக்க : வாடகை வீடு Vs சொந்த வீடு.. இரண்டில் எது சிறந்தது?.. நிபுனர்கள் கூறுவது என்ன?

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன ?

இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அவசர தேவைகளுக்கு கடனளிக்கும்போது வசூலிக்கும் வட்டி ரெப்போ வட்டி விகிதம் எனப்படுகிறது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், பணவீக்கத்தையும் முடிவும் செய்யும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரெப்போ வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றம், வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.