ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. 5.5% ஆகவே தொடரும்.. ஆர்பிஐ அறிவிப்பு!
Repo Rate Remain Same | ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் அதிரடியாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 5.5 சதவீதமாகவே தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, ஆகஸ்ட் 06 : ரெப்போ வட்டி விகிதத்தில் (Repo Interest Rate) மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) அறிவித்துள்ளது. வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும் என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இந்த முறை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
ரெப்போ வட்டியில் மாற்றமில்லை – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய் கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 4, 2025 அன்று தொடங்கியது. சஞ்சய் மல்ஹோத்ரா ஆர்பிஐ கவர்னராக பதவியேற்றதும் பங்கேற்கும் 4வது கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்லோத்ரா இன்று (ஆகஸ்ட் 06, 2025) வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்பாக ரெப்போ வட்டி விகிதத்தை குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அது குறித்து கூறிய அவர், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று கூறினார். மேலும் ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : EPFO : ஊழியர்களின் பிஃஎப் கணக்கில் நிறுவனங்கள் எப்படி பங்களிக்கின்றன? விவரம் இதோ!
ரெப்போ வட்டி விகிதம் குறித்து அரிவித்த சஞ்சய் மல்ஹோத்ரா
#WATCH | Monetary Policy Committee decides to keep the policy repo rate unchanged at 5.5%, neutral stance to continue, says RBI Governor Sanjay Malhotra.
(Video source: RBI/YouTube) pic.twitter.com/dZLo5WjFKj
— ANI (@ANI) August 6, 2025
மூன்று முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ஆர்பிஐ
கடந்த ஐந்து ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமலே இருந்த நிலையில், ஆர்பிஐ கவர்னராக பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வந்தார். அதாவது பிப்ரவரி, 2025-ல் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் குறைத்து உத்தரவிட்டார். இதன் காரணமாக 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25 ஆக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏப்ரல், 2025-ல் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் குறைத்து உத்தரவிட்டார். இதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. பின்னர் மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்திற்கான அறிவிப்பு வெளியானது. அப்போது 50 புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில், ரெப்போ வட்டி விகிதம் வெறும் 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க : இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.67,000 கோடி.. மத்திய அரசு தகவல்!
இவ்வாறு தொடர்ந்து மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.