EPFO : ஊழியர்களின் பிஃஎப் கணக்கில் நிறுவனங்கள் எப்படி பங்களிக்கின்றன? விவரம் இதோ!
Employer PF Breakdown Guide : ஓய்வு காலத்தில் பணியாளர்களின் பொருளாதார சிக்கலை தடுக்க மத்திய அரசால் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழியர்கள் ஓய்விற்கு பின் பொருளாதார ரீதியாக பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (Employees Provident Fund Organisation). இது பணியாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமானது வைப்பு நிதி (Provident Fund) திட்டம். குறைந்தபட்சம் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில், பி.எப். திட்டத்தில் இணைவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஊழியர்களும், நிறுவனங்களும் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12 சதவிகிதம் பங்களிக்க வேண்டும். மாதம் குறிப்பிட்ட தொகை ஊழியரின் வருமானத்தில் இருந்து செலுத்தப்பட வேண்டும், அதே போல அதற்கு சமமான தொகையை நிறுவனங்களும் செலுத்தும்.
பி.எப். திட்டத்தில் பணியாளரும் நிறுவனமும் எவ்வாறு பங்களிக்கின்றன?
-
, பி.எப். திட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டது:
-
EPF (Employees Provident Fund) – ஓய்வு நிதி
இதையும் படியுங்கள்UPI : யுபிஐ-ல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறதா?.. உண்மை என்ன?UPI : யுபிஐ பண பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா.. சர்வதேச நிதியம் அறிக்கை! -
EPS (Employees Pension Scheme) – ஓய்வூதியத்திட்டம்
-
EDLI (Employees Deposit Linked Insurance Scheme) – காப்பீடு திட்டம்
-
-
ஒரு ஊழியர் மாதம் ரூ. 2,000 செலுத்துகிறார் எனில், நிறுவனம் அதே அளவான ரூ2,000 பிஎஃப் திட்டத்திற்காக செலுத்த வேண்டும். இதன் மூலம் மொத்தம் ரூ.4,000 ஒவ்வொரு மாதமும் ஊழியரின் பி.எப். கணக்கில் செல்கிறது. இந்த தொகைக்கு வருடாந்திர வட்டி வழங்கப்படும்.
-
ஊழியர் செலுத்தும் தொகை அனைத்தும் பி.எப். கணக்கில் சேர்க்கப்படுகிறது. ஆனால் நிறுவனத்தின் பங்களிப்பு மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
இதையும் படிக்க : ஒரு ஸ்மார்ட் ஐடியா.. ரூ.50,000 முதலீடு…குடும்ப தொழிலை ரூ.340 கோடி நிறுவனமாக மாற்றிய இளைஞர்!
நிறுவன பங்களிப்பு எப்படி பிரிக்கப்படுகிறது?
-
நிறுவனம் பங்களிக்கும் 12% தொகையில் 8.33% பென்சன் திட்டத்திற்கு செல்கிறது.
-
மீதமுள்ள 3.67% பிஎஃப் திட்டத்திற்கு செல்கிறது.
-
மேலும், காப்பீடு தனியாகவும் நிறுவனத்தால் செலுத்தப்படும்.
உதராணமாக நீங்கள் மாதம் 2,000 ரூபாயை பிஃஎப்க்கு கொடுக்கிறீர்கள் எனில், உங்கள் நிறுவனம் தனியாக 611 ரூபாயை பிஎஃப் திட்டத்திற்காகவும், ரூ.1,389 ஐ பென்சனுக்காக என மொத்தம் ரூ.2000 செலுத்தும்.
இதையும் படிக்க : கடனை திருப்பி செலுத்திய பிறகும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படவில்லையா?.. அப்போ இத பண்ணுங்க!
இதை எங்கு சரிபார்க்கலாம்?
இதனை இபிஎஃப்ஓ உறுப்பினர் பாஸ்புக் பக்கம் மூலமாக, உங்கள் மற்றும் நிறுவன பங்களிப்பைத் தெளிவாகக் காணலாம். இதனைக் காண https://www.epfindia.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்டு அளித்து லாகின் செய்யவும். பின்னர் Service என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து Employees என்ற பக்கத்திற்கு சென்று Passbook என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளளலாம். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் நிறுவன ஹெச்ஆரிடம் கேட்டு தெளிவு பெறலாம்.