Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு ஸ்மார்ட் ஐடியா.. ரூ.50,000 முதலீடு…குடும்ப தொழிலை ரூ.340 கோடி நிறுவனமாக மாற்றிய இளைஞர்!

Smart idea builds 340 Cr brand : ராஜஸ்தானில் தனது குடும்ப தொழிலை தனது ஸ்மார்ட்டான ஐடியாவால் ரூ.340 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிக்காட்டியிருக்கிறார் இளைஞர் ஒருவர். இத்தகைய வளர்ச்சிக்கு அவர் என்ன செய்தார் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஒரு ஸ்மார்ட் ஐடியா.. ரூ.50,000 முதலீடு…குடும்ப தொழிலை ரூ.340 கோடி நிறுவனமாக மாற்றிய இளைஞர்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Jul 2025 13:44 PM

ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தின் சிறிய நகரமான சரதார்‌ஷஹார் பகுதியில் ஒரு சிறிய அளவிலான ஃபர்னிச்சர் (Furniture) கடையாக இருந்த குடும்ப தொழிலுக்கு புதிய முகத்தை கொடுத்து, அதை ரூ.340 கோடி வருமானம் உள்ள முன்னணி நிறுவனமாக மாற்றியவர் ரகுநந்தன் சராஃப். அவருடைய தாத்தா மற்றும் தந்தை தொடங்கிய இந்த ஃபர்னிச்சர் வியாபாரம் சுமார் நாற்பது ஆண்டுகளாக அந்த நகரில் செயல்பட்டு வந்தது.  ஆனால், அவர்களது தொழில் மிகவும் குறுகிய வட்டத்தில் இயங்கிவந்தது. ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் பிகாம் படித்த ரகுநந்தன், தனது குடும் தொழிலை நாடு முழுவதும் விரிவுபடுத்த நினைக்கிறார். இதனையடுத்து குளோபல் பிசினஸ் (Business) ஆபரேசன்ஸ் கல்லூரியில் எம்பிஏ படித்து முடித்ததும் தனது தந்தையிடம் அவரது திட்டத்தை சொல்கிறார். முதலில் மறுக்கும் தந்தையை சம்மதிக்க வைத்து,  கடினமாக உழைத்து குடும்ப தொழிலை மிகப்பெரிய வணக நிறுவனமாக மாற்றிக் காட்டினார்.

வெறும் ரூ.50,000 முதலீட்டில் ஸ்மார்ட் முயற்சி

கடந்த 2014 ஆம் ஆண்டு, வெறும் ரூ.50,000 முதலீட்டில் சரஃப் ஃபர்னிச்சர் (Saraf Furniture) எனும் இணையதளத்தை தொடங்கி, ஆன்லைன் வியாபாரத்தில் ஒரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்தார். அந்த நேரத்தில் ஆன்லைன் ஃபர்னிச்சர் வியாபாரம் பெரிதாக வளராத நிலையில் இருந்தது. அர்பன் லேடர், பெப்பர்ஃபிரை போன்ற நிறுவனங்களும், அமேசான் மற்று் ஃபிலிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களும் அப்போது தான் வளரத் தொடங்கியிருந்த காலம். இந்த நேரத்தில் தங்களது நிறுவனத்தின் 6,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை புகைப்படங்களாக வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்த்தார். குறிப்பாக வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள், சமையலறை பொருட்கள், கட்டில்கள் என பல்வேறு வகையான தயாரிப்புகளை ரூ.999 முதல் ரூ. 2.5 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யத் துவங்கினார்.

இதையும் படிக்க: தொழில் தொடங்க அரிய வாய்ப்பு! – தபால் நிலைய உரிமையைப் பெறலாம் – தகுதிகள் என்ன?

ஒரே ஆண்டில் அசூர வளர்ச்சி

முதல் ஆண்டே அவரது நிறுவனம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியது. தொடர்ந்து இந்த நிறுவனம் வளர்ச்சிப்பாதையில் முன்னேறியது. கடந்த 2019 ஆம் ஆண்டு அவருடைய நிறுவனம் ரூ.90 கோடி வருமானம் பெற்றதாகவும் தற்போது , சரஃப் ஃபர்னிச்சர் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.340 கோடி என்று பிசனஸ் ஸ்டேண்டர்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனத்துக்கு ராஜஸ்தானின் சரதார்‌ஷஹார் மற்றும் சுரூ பகுதிகளில் 8 உற்பத்தி நிலையங்கள் உள்ளன. மேலும், டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் குடவுன்கள் மற்றும் ஷோரூம்கள் உள்ளன.

இதையும் படிக்க : 70 முறை நிராகரிப்பு…. ரூ.6,700 கோடி மதிப்பில் நிறுவனம் – ரேபிடோ நிறுவனர் ஜெயித்த கதை

ரகுநந்தனின் வியாபார தந்திரம்

ரகுநந்தன் ஷோரூம்கள் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களிடமும். ஆன்லைன் மூலமாகவும் இரண்டு வழிகளில் விற்பனை செய்து தனது விற்பனையை அதிகரித்திருக்கிறார். அந்த நேரம் இந்தியாவில் இணைய உள்கட்டமைப்பு வளரந்ததால் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களிடம் விரைவாக பொருடகள் சென்று சேர விற்பனை அதிகரித்தது.

ஒரு சிறிய கடையில் துவங்கி, தனது பதிய சிந்தனை மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.340 கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்த ரகுநந்தன் சராஃப், இன்றைய இளைஞர்களுக்கு ஒரே நேரத்தில் பாரம்பரியம் மற்றும் புதுமையை இணைப்பதன் மூலம் வெற்றி பெற முடியும் என்ற புதிய வியாபார யுக்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.