Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

70 முறை நிராகரிப்பு…. ரூ.6,700 கோடி மதிப்பில் நிறுவனம் – ரேபிடோ நிறுவனர் ஜெயித்த கதை

Rapido Founder’s Success Story : ஒருமுறை, 2 முறை அல்ல... தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட நிராகரிப்புகளுக்கு பிறகும் போராடி இன்று ரூ.6,700 கோடி மதிப்புடைய நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார் தெலங்கானா இளைஞர். இந்த இளைஞர் உருவாக்கிய ரேபிடோ இன்று மக்களின் பயணங்களை எளிதாக மாற்றியிருக்கிறது.

70 முறை நிராகரிப்பு…. ரூ.6,700 கோடி மதிப்பில் நிறுவனம் – ரேபிடோ நிறுவனர் ஜெயித்த கதை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Jul 2025 18:14 PM

கடினமாக முயற்சித்தால் அடைய முடியாதது எதுவுமில்லை. சிலருக்கு வாழ்க்கையில் எல்லாமே எளிதில் கிடைத்துவிடும். சிலர் சிறிய விஷயங்களுக்கு கூட கடுமையாக போராட வேண்டியிருக்கும். இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் தான் தெலங்கானாவைச் (Telangana) சேர்ந்த பவன் குண்டுபள்ளி. இவர் தான் புகழ்பெற்ற பைக் டாக்ஸியான ரேபிடோவின்(Rapido) நிறுவனர். ஒலா, உபர் (Uber) போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட்டு இன்று தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கிறது ரேபிடோ.  ஐஐடியில் படித்து தேர்ச்சி பெற்ற இவர், 70 முறைகளுக்கும் மேல் நிராகரிப்புகளை சந்தித்திருக்கிறார். ஆனால் இன்று கோடிக்கணக்கான மதிப்புள்ள நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.  அவரின் வெற்றிப் பயணம் இன்று பல இளைஞர்களுக்கும், தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பவனின் ஆரம்பகாலம்

தெலுங்கானாவைச் சேர்ந்த பவன் குண்டுபள்ளி, சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டர் மற்றும் பங்குசந்தை போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், இந்தியாவின் மிகக் கடினமான தேர்வாக கருதப்படும் IIT-JEE தேர்வை வென்று, IIT காரக்பூர் இல் தனது பட்டப்படிப்பை முடித்தார்.  படிப்பை முடித்த பின், பவன் சாம்சங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு தொழில்நுட்ப அனுபவம் கிடைத்தது.

தோல்வியடைந்த முதல் முயற்சி

அவருக்கு தொழில் துவங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இதனையடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.   இதனையடுத்து தனது நண்பர் அரவிந்த் சங்காவுடன் இணைந்து தி கேரியர் என்ற லாஜிஸ்டிக் ஸ்டார்ட் அப்பை தொடங்கினார்.  ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவரால் தனது நிறுவனத்தை தொடர முடியவில்லை.

இதையும் படிக்க : வெள்ளியில் முதலீடு செய்யுங்கள்.. Rich Dad Poor Dad எழுத்தாளர் ராபர்ட் கியோசகி அறிவுரை!

ரேபிடோ உருவான விதம்

இந்த தோல்விக்கு பின்னரும், பவன் குண்டுபள்ளி நம்பிக்கையை இழக்கவில்லை. மக்களுக்கு குறைந்த விலையில் மற்றும் வேகமான போக்குவரத்து சேவையை வழங்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. இதனையடுத்து செயலில் இறங்கினார். இப்படித்தான் பெரு நகரங்களில் மக்களின் பயணங்களை எளிதாக்கும் ரேபிடோ (Rapido) உருவானது. அந்த நிறுவனத்தின் மூலம் பைக் டாக்சி மற்றும் ஆட்டோ சேவையை மக்களுக்கு சுலபமாகவும், மலிவாகவும் வழங்கும் வகையில் உருவாக்கினார்.

70 முறை தோல்வி

புதிய தொழில்முனைவோராக பவனின் இந்த எண்ணத்திற்கு முதலீட்டாளர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. 75 முதலீட்டாளர்கள் “இது உபர், ஓலாவுடன் போட்டி போட முடியாது” என மறுத்தனர். ஆனால் ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முன்ஜால், ரேபிடோ நிறுவனத்தின் பின்னால் உள்ள வாய்ப்பை உணர்ந்து முதலீடு செய்தார். இதுவே திருப்புமுனையாக அமைந்தது. பிற முதலீட்டாளர்களும் பின்தொடர, 2016-ம் ஆண்டு ரேபிடோ அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இதையும் படிக்க: 45 வயதில் ரூ.4.7 கோடியுடன் ஓய்வுபெறும் நபர் – அவரது உறவினர் பகிர்ந்த சீக்ரெட்!

உபர், ஓலா போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் பெரிய நகரங்களில் கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் பவன் மற்றும் அவரது குழு மற்ற நகரங்கள், தரம் 2 மற்றும் தரம் 3 நகரங்களில் கவனம் செலுத்தினர். இதனால், பெரும்பாலான மக்களுக்கு உண்மையான போக்குவரத்து சவால்களுக்கு தீர்வு கிடைத்தது.

துவக்கத்தில், ரேபிடோ தனது கட்டணத்தை ரூ.15 அடிப்படை கட்டணமாகவும், கிலோமீட்டருக்கு ரூ.3 எனவும் நிர்ணயித்தது. இது லாபத்துக்கு சவாலாக இருந்தாலும், மக்களுக்கு ஏற்ற சேவையாக இருந்து வருகிறது

ரேபிடோவின் வளர்ச்சி

இன்று ரேபிடோ 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுகிறது.  மேலும் 5 கோடியும் மேற்பட்ட முறை ரேபிடோ ஆப் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. 7 லட்சம் பயனர்கள் மற்றும் 50,000  கேப்டன்கள் எனப்படும் டிரைவர்களை கொண்டு, தினமும் ஆயிரக்கணக்கான பயணங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.6,700 கோடி என்று கூறப்படுகிறது.  இதில் ஹைலைட்டாக ஸ்விகி (Swiggy) நிறுவனமும் ரேபிடோவில் முக்கிய முதலீட்டாளராக இருக்கிறது.  “தோல்வி என்பது முடிவல்ல. அது வெற்றிக்கான படி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது பவனின் வாழ்க்கை.