எல்ஐசி பாலிசிக்கு எதிராக கடன் பெறலாமா? அதற்கான தகுதிகள் என்ன?
LIC Policy Loan Guide : எல்ஐசி பாலிசிக்கு எதிராக கடன் பெற முடியும். ஆனால் அது சில வகை பாலிசிகளுக்கு மட்டுமே கிடைக்கும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்தியிருக்க வேண்டும். இந்த கட்டுரையில் எல்ஐசி பாலிசிக்கு எதிராக கடன் பெற என்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

எல்ஐசி (Life Insurance Corporation of India) என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இது அனைத்து வருமானக் குழுக்களுக்குமான பல்வேறு வகையான லைஃப் இன்சூரன்ஸ் (Life Insurance) திட்டங்களை வழங்குகிறது. இது அரசு சார்ந்து இயங்குவதால் மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களைக் காட்டிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த பாலிசிகள் மூலம் மக்கள் பாதுகாப்பு மட்டுமல்லாமல், சேமிப்பு வாய்ப்புகளும் பெறுகின்றனர். குறிப்பாக, சில பாலிசிகள் மூலமாக அவசர தேவைக்காக கடனும் பெற முடியும். இந்த கட்டுரையில் எல்ஐசி (LIC) பாலிசிக்கு எதிராக கடன் பெறலாமா? அப்படி பெறுவதற்கான தகுதி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
LIC பாலிசிக்கு எதிராக கடன் பெறுவதற்கான தகுதி என்ன?
-
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ப்ரீமியம் செலுத்தியிருக்க வேண்டும்.
-
உங்கள் பாலிசிக்கு சரண்டர் வேல்யூ இருக்க வேண்டும், அதாவது, பாலிசியை இடையிலேயே நிறுத்தினால், உங்களுக்கு அதுவரை செலுத்திய தொகையை திட்டங்களுக்கு ஏற்ப திருப்பி அளிக்கும். இது கடன் பெற உங்களை மேலும் தகுதியுடையவராக மாற்றும்.
இதையும் படியுங்கள்RBI : கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது.. வங்கிகளுக்கு ஆர்பிஐ அதிரடி உத்தரவு!பண்டிகை காலங்களில் வங்கிகள் கடன் வழங்க முன்வருவது ஏன்?… கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!அவசரமாக பணம் தேவைப்படுகிறதா? காருக்கு கடன் வழங்கும் வங்கிகள்!பாலிசிதாரரும் நாமினியும் இறந்தால் காப்பீட்டுத் தொகை யாருக்கு கிடைக்கும்? -
எல்லா வகை காப்பீட்டு திட்டங்களுக்கும் கடன் பெற வாய்ப்பு கிடைக்காது. உங்கள் எல்ஐசி பாலிசி எண்டவ்மெண்ட் பாலிசி (Endowment Policy) வகையைச் சேர்ந்திருந்தால் மட்டுமே, அதற்கு எதிராக கடன் பெற முடியும். இந்த வகை பாலிசி, நீங்கள் வாழ்ந்திருந்தாலும் அல்லது இறந்திருந்தாலும் ஒரு நிலையான தொகை வழங்கப்படும். ஆனால், டெர்ம் இன்சூரன்ஸ் போன்ற பாலிசிகள் மீது கடன் பெற முடியாது, ஏனெனில் அவற்றில் சேமிப்பு மதிப்பு கிடையாது.
-
நீங்கள் எல்ஐசி பாலிசிக்கு எதிராக வாங்கும் கடன் தொகை, அந்த பாலிசியின் சரண்டர் வேல்யூவில் இருந்து 85 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை இருக்கும். அதாவது, உங்கள் பாலிசியை இடையில் நிறுத்தினால் கிடைக்கும் தொகையை மையமாகக் கொண்டு தான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். உதாரணமாக, உங்கள் பாலிசியின் சரண்டர் வேல்யூ ரூ.1,00,000 என வைத்துக்கொண்டால், நீங்கள் பெறக்கூடிய கடன் ரூ.85,000 முதல் ரூ.90,000 வரை இருக்கலாம்.
கடன் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள்
-
இந்த கடனை, உங்கள் பாலிசி முடியும் காலத்திற்கு முன் எந்த நேரத்திலும் திருப்பிச் செலுத்தலாம்.
-
நீங்கள் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டி தொகையை திரும்பி செலுத்தாமல் விட்டால், அந்த தொகை உங்கள் பாலிசி முடிவில் கிடைக்க வேண்டிய தொகையில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
-
மேலும், நீங்கள் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டி சேர்த்து, உங்கள் பாலிசியின் சரண்டர் மதிப்பை விட அதிகமாக இருந்தால், அந்த பாலிசி செல்லாததாக மாறும். அதாவது, அந்த பாலிசி மேலே தொடராது.
எப்படி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்?
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
-
எல்ஐசி வாடிக்கையாளர் போர்ட்டலுக்கு அல்லதுஎல்ஐசி மொபைல் ஆப்பிற்கு செல்லவும்.
-
உங்கள் Username மற்றும் Password-ஐ பயன்படுத்தி Login செய்யவும்.
-
Online Loan Request என்பதைக் கிளிக் செய்யவும்.
-
உங்கள் பாலிசியைத் தேர்வு செய்து, கடன் தொகையை உள்ளிடவும்.
-
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
-
ஒப்புதல் கிடைத்தவுடன், உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக கடன் தொகை வரவு வைக்கப்படும்.
எல்ஐசி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க:
அருகிலுள்ள எல்ஐசி கிளைக்கு சென்று, கீழ்காணும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்:
-
-
எல்ஐசி பாலிசி ஃபாண்ட்
-
ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணம்.
-
கடன் விண்ணப்பப் படிவம்
-
ரத்து செய்யப்பட்ட ஒரு காசோலை (Cancelled Cheque)
-
அலுவலர் உங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்த பிறகு, கடனுக்கு ஒப்புதல் அளிப்பார். பின்னர் உங்களுக்கு பணம் வழங்கப்படும்.