ராஜஸ்தானில் பரபரப்பு.. விபத்தில் சிக்கிய போர் விமானம்.. விமானி உயிரிழப்பு
Indian Air Force Flight Crash In Rajasthan : ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் விமானி உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

ராஜஸ்தான், ஜூலை 09 : ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் (Rajasthan Flight Crash) இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளான (Indian Air Force Flight Crash) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து ரத்தன்கரில் நடந்தது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்திய விமானப்படை சொந்தமான பல்வேறு விமானங்கள் உள்ளன. குறிப்பாக, போருக்கா பிரத்யேமாக பல்வேறு விமானங்களை மத்திய அரசு வாங்கி உள்ளது. அதில் ஒன்று தான் ஜாகுவார் போர் விமானம். இந்த விமானம் 2025 ஜூலை 9ஆம் தேதியான இன்று மதியம் ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் ரத்தன்கரின் பானுடா பிடாவதன் கிராமத்தில் விபத்துக்குள்ளானது.
விமானம் விழுந்து நொறுங்கியதும் தீப்பிடித்து ஏரிந்துள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, போலீசாரும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை அடுத்து, அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்தில் ஒரு விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




விபத்தில் சிக்கிய போர் விமானம்
A Jaguar fighter aircraft of the Indian Air Force has crashed near Churu district of Rajasthan. More details awaited: Defence Sources pic.twitter.com/CYbHIyQLPl
— ANI (@ANI) July 9, 2025
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, விமானம் விழுந்து நொறுங்கி அதனின் பாகங்கள் பல்வேறு சிதறி கிடந்துள்ளதாக தெரிவித்தனர். 200 மீட்டர் வரை விமானத்தின் பாகங்கள் சிதறியதாக தெரிவித்தனர். மேலும், விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
Also Read : ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ரஃபேல் எக்ஸ் கார்ட்.. வான்வழி போரில் ஒரு திருப்புமுனை..
இந்த விபத்தின் காரணமாக அருகிலுள்ள வயல்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதை தாங்களாகவே அணைக்க முயன்றதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதில், விமானி உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், இரண்டு பேரின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.
மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஜாகுவார் போர் விமானம் விபத்துக்காளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read : குஜராத்: 45 ஆண்டுகள் பழைமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்..
மற்றொரு விபத்து
ஜாகுவார் விபத்தில் சிக்குவது முதல்முறையல்ல. முன்னதாக, 2025 ஏப்ரல் 2ஆம் தேதி குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இரவு 9:30 மணிக்கு நடந்தது. பயிற்சிப் பணியின் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விமான கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்த நிலையில், துணை விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.