AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை நோக்கி வந்த விமானம்.. வந்தது கருகிய வாசனை.. பதறிய பைலட்.. என்ன நடந்தது?

Mumbai Chennai Air India Flight : மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கருகிய வாசனை ஏற்பட்டததை அடுத்து, விமானம் மும்பைக்கு திரும்பியது. மும்பையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட விமானம், 45 நிமிடங்களில் மீண்டும் மும்பைக்கு திரும்பியது. விமானத்திற்குள் கருகிய வாசனை வந்ததை அடுத்து, விமானம் மும்பை திருப்பி விடப்பட்டது.

சென்னை நோக்கி வந்த விமானம்.. வந்தது கருகிய வாசனை.. பதறிய பைலட்.. என்ன நடந்தது?
ஏர் இந்தியா விமானம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Jun 2025 13:10 PM IST

சென்னை, ஜூன் 29 : மும்பையில் இருந்து சென்னைக்கு (Mumbai Chennai Air India Flight) புறப்பட்ட ஏர் இந்தியா (Air India) விமானத்தில் கருகிய வாசனை ஏற்பட்டததை அடுத்து, விமானம் மும்பைக்கு திரும்பியது. 2025 ஜூன் 27ஆம் தேதி மும்பையில் இருந்து சென்னைக்கு AI639 என்ற விமானம் இரவு 11.30 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட 45 நிமிடங்களில் மீண்டும் மும்பைக்கு திரும்பியது. விமானத்திற்குள் கருகிய வாசனை வந்ததை அடுத்து, விமானம் மும்பை திருப்பி விடப்பட்டது. இதனை அடுத்து, பயணிகள் பத்திரமாக இறக்கிவிடப்பட்டு, மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், “2025 ஜூன் 27ஆம் தேதி மும்பையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் AI639 விமானத்தில் கருகிய வாசனை ஏற்பட்டது. இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் மும்பையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் வேறு விமானத்தில் மாற்றப்பட்டனர்” என கூறினார். அதே நாளில், மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் சமீப நாட்களில் தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வருகிறது. ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ந்து தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், ஏர் இந்தியா விமானத்தின் டிக்கெட் விலையும் சரிந்துள்ளது.

பயணிகள் பெரிதாக ஏர் இந்திய விமானத்தை தேர்வு செய்யாததால், அதனின் டிக்கெட் விலையை நிறுவனம் குறைத்துள்ளது. இப்படியான சூழலில், 2025 ஜூன் 27ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது பயணிகளிடையே பீதியடைய வைத்துள்ளது.

திருப்பி விடப்பட்ட ஏர் இந்திய விமானம்

அகமதாபாத் விமான விபத்து

2025 ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாது உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விபத்தின்போது, விமானத்தில் 230 பயணிகள், இரு பைலட்டுகள் என 242 பேர் இருந்துள்ளனர். விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே சென்றுக்கு கொண்டிருந்தபோது, திடீரென தடம் மாறி கீழே விழுந்தது.  அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மீது விழுந்துள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே தப்பித்த நிலையில், மற்ற பயணிகள் 241 பேரும் விமான விபத்தில் தீயில் கருகி உயிரிழந்தனர். அதே நேரத்தில் விடுதியில் இருந்த 30 மாணவர்கள் உயிரிழந்தன்ர. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Follow Us