Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இண்டிகோவின் அசத்தல் ஆஃபர்.. உள்நாட்டு விமான சேவை ரூ. 1,499 முதல் தொடக்கம்..

Indigo Monsoon Sale: இண்டிகோ தனது வருடாந்திர பருவமழை தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அதில் உள்நாட்டு விமான சேவை ரூ. 1499 முதலும், சர்வதேச விமான சேவை ரூ. 4,399 முதலும் தொடங்கப்படுகிறது. முன்பதிவு மட்டுமல்லாமல் பிற சேவைகளிலும் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோவின் அசத்தல் ஆஃபர்.. உள்நாட்டு விமான சேவை ரூ. 1,499 முதல் தொடக்கம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 25 Jun 2025 11:23 AM

ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ (Indigo2), ஜூன் 24 2025 அன்று அதன் வருடாந்திர பருவமழை தள்ளுபடி விற்பனையை (Indigo Monsoon Sale) அறிவித்துள்ளது. இதில் உள்நாட்டு விமான கட்டணங்கள் ரூபாய் 1499 ஆகவும், சர்வதேச விமான கட்டணங்கள் ரூபாய் 4,399 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழை தள்ளுபடி விற்பனையானது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிகள் தேர்ந்தெடுக்கும் பல்வேறு கூடுதல் சலுகைகளுக்கு பிரத்தியேக தள்ளுபடிகளையும் வழங்குகிறது. 2025 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை மக்கள் தங்களது பயண திட்டத்திற்கு முன்பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2025, ஜூன் 24 முதல் 2025, ஜூன் 29 வரை இந்த தள்ளுபடி விற்பனையானது இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இண்டிகோவின் அசத்தல் ஆஃபர்:

இந்த காலத்தில் வாடிக்கையாளர்கள் உள்நாட்டு விமானங்களை ரூபாய் 1499 முதலும், சர்வதேச விமானங்களை ரூபாய் 4,399 முதலும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூடுதல் வசதி மற்றும் கூடுதல் கால் இட வசதிக்காக இண்டிகோ ஸ்ட்ரெச் (Indigo Strech) வசதியை தேர்வு செய்யலாம் எனவும் இதற்கான முன்பதிவு கட்டணங்கள் ரூபாய் 9 ஆயிரத்து 999 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சேவையிலும் தள்ளுபடி:


இந்த தள்ளுபடி விற்பனையில் விமானங்களில் முன்பதிவு செய்வது மட்டுமல்லாமல் பயணிகள் 50 சதவீதம் தள்ளுபடியை கூடுதல் சேவைகளிலும் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு விமானங்களில் அதிக லக்கேஜிற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியும், சர்வதேச விமானங்களில் 15 கிலோ, 20 கிலோ மற்றும் 30 கிலோ லக்கேஜிற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். இண்டிகோ வழங்கக்கூடிய பாஸ்ட் பார்வர்ட் (Fast Forward) சேவை அதாவது செக்கின் மற்றும் போர்டிங் எந்த நேரத்திலும் செய்யலாம் என்ற சேவையில் சுமார் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதற்கிடையில் குறிப்பிடத்தக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் சீட் செலக்ஷனிற்கு 99 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல் எக்ஸ்ட்ரா லேக்ரூம், உள்நாட்டு விமானங்களில் 500 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது