AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேடே அழைப்பு விடுத்த பைலட் – சென்னை நோக்கி வந்த விமானம் பெங்களூருவில் தரையிறக்கம்

IndiGo Pilot Issues Mayday : அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பைலட் மேடே என்ற அவசர கால அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

மேடே அழைப்பு விடுத்த பைலட்  –  சென்னை நோக்கி வந்த விமானம் பெங்களூருவில் தரையிறக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Jun 2025 19:50 PM IST

பெங்களூரு, ஜூன் 21:  அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ 6E-2602 விமானம், பைலட் எழுப்பிய மேடே அழைப்புக்குப் பிறகு, பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்தில் ஜூன் 21, 2025 காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணத்தின் போதே பைலட் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பான தரையிறக்கத்திற்கு வழிவகுக்க பெங்களூரு ஏர்போர்ட் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு நிலையம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து விமானம் காலை 10:15 மணி அளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் சுமார் 180க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது, 6E-2602 எனும் விமானம் தொழில்நுட்ப பிரச்னையால் கவுகாத்தியில் இருந்து சென்னைக்குச் செல்லும் வழியில் பெங்களூருவில் அவசர தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.”

இந்த சம்பவம் குறித்து நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் (DGCA) கவனம் செலுத்தியுள்ளது. தொழில்நுட்பா கோளாறு குறித்து வழக்கமான விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாக இந்திய விமான சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது விமான பராமரிப்பின் மீது புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘Mayday’ அழைப்பு என்பதான் என்ன?

பைலட் ஒருவர் விமானம் கடுமையான பிரச்சனையில் சிக்கியிருக்கிறது என்று அறிவிக்க, “Mayday” எனும் அவசர அழைப்பு கொடுக்கப்படுகிறது. இது ஒரு உயர் அவசர நிலையில் பயன்படுத்தப்படும் ரேடியோ சிக்னல் ஆகும். இதுது மூன்று முறை தொடர்ந்து கூறப்படும். பைலட் மூன்றும் மேடே மேடே மேடே என்று கூறுவர். இதனால் பைலட்டின் அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பைலட் கீழ்க்காணும் சூழ்நிலைகளில் மேடே அழைப்பு விடுக்கலாம்

  • எஞ்சின் பழுது, ஹைட்ராலிக் பிரச்னை என மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு

  • தீவிர காற்றழுத்தம் அல்லது தடுமாற்றம்

  • பயணிகளுக்கு உடனடி ஆபத்து, குறிப்பாக மாரடைப்பு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பைலட் மேடே அழைப்பு விடுப்பார்.

  • எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும்போது.

  • தீ, புகை போன்ற ஆபத்து அறிகுறிகள்.

மேற்சொன்ன பிரச்னைகள் ஏற்பட்டால் பைலட் அவசர கால அழைப்பு விடுப்பார். இதனையடுத்து அருகிலுள்ள விமான நிலையம் அவசர கால தரையிறக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் (Air Traffic Control) அனைத்து வழிகளையும் ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட விமானத்திற்கு முதலிடம் கொடுக்கும். தரையிறக்கப்படும் விமான நிலையத்தில் மருத்துவம், தீயணைப்பு, பாதுகாப்பு அணி தயார் நிலையில் காத்திருக்கும். பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

Follow Us