Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்.. என்ன காரணம்?

British Fighter Jet: பிரிட்டிஷ் எப் 35 ரக போர் விமானம் எரிப்பொருள் குறைப்பாடு காரணமாக திவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிப்பொருள் நிறப்பிய பின் இந்திய பாதுக்காப்பு படையினர் ஆய்வு மேற்கொண்ட பின் மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்.. என்ன காரணம்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Jun 2025 12:01 PM

திருவனந்தபுரம்: பிரிட்டிஷ் போர் விமானம் (British Air Force) ஒன்று திருவனந்தபுரத்தில் இருக்கும் விமான நிலையத்தில் அவசரமாக நேற்று அதாவது ஜூன் 14 2025 அன்று தரை இறக்கப்பட்டது. நூறு கடல் மைல் தொலைவில் உள்ள போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட எப் 35 ரக விமானம் திருவனந்தபுரத்தில் தரை இறக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போர் விமானம் கப்பலில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கடல் கொந்தளிப்பின் காரணமாக மீண்டும் கப்பலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும், போதிய எரிபொருள் இல்லாததன் காரணமாகவும் திருவனந்தபுரத்தில் இருக்கக்கூடிய விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் போர் விமானம்:

ஜூன் 14 2025 இரவு 9:30 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானம் தரையிறங்கிய போது அதில் ஒரே ஒரு விமானி மட்டுமே இருந்ததாக தெரியவந்தது. எரிபொருள் இல்லாத காரணத்தால் தரையிறக்கப்பட்ட விமானம் இந்திய பாதுகாப்பு துறையிடம் இருந்து அனுமதி பெற்ற பின் எரிபொருள் நிரப்பப்படும் எனவும் பின்னர் இந்திய விமானப்படையினர் ஆய்வு நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவடைந்த பின் மீண்டும் அந்த விமானம் கப்பலுக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து:


கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் மேற்கொண்ட 241 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தரையில் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்த மக்கள் உட்பட 274 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் வகையில் டி என் ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் தற்போது வரை 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சனிக்கிழமை இரவு அதாவது ஜூன் 14 2025 இரவு வரை நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த 19 பேரில் குஜராத், மத்திய பிரதேஷ் மற்றும் ராஜஸ்தான் சேர்ந்தவர்கள் அடங்குவர். சில வெளிநாட்டு பயணிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளது அடையாளம் காணப்பட்ட உடல்கள் தங்களது உறவினர்களிடம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமான விபத்தில் சிக்கி உயிரிழந்து அடையாளம் காணப்பட்ட பூர்ணிமா பட்டேலின் உடல் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த பூர்ணிமா லண்டனில் வசிக்கக்கூடிய தனது மகனை காண சென்றபோது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார்