AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டுமா? ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. பதறிய பயணிகள்.. என்னாச்சு?

Air India Flight : சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் விமானத்தின் என்ஜினில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் காலை 5.20 மணி வரை விமானம் இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால், மக்கள் அச்சமடைந்தனர்.

மீண்டுமா? ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. பதறிய பயணிகள்.. என்னாச்சு?
ஏர் இந்தியா விமானம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jun 2025 08:54 AM IST

கொல்கத்தா, ஜூன் 17 : சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்குச் சென்ற (Sanfrancisc0 – M ஏர் இந்தியா விமானத்தில் (Air India Flight) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டததை அடுத்து, கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. கொல்கத்தா விமான நிலையத்திற்கு நள்ளிரவு 12.45 மணிக்கு வந்த ஏர் இந்திய விமானத்தை, காலை 5.20 மணி வரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இடது எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து, 2025 ஜூன் 17ஆம் தேதியான இன்று காலை 5.20 மணியளவில் பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு, மாற்று விமானத்தில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

கடந்த சில தினங்களாகவே விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக ஏர் இந்தியா விமான சேவை தொடர்பாக  தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 2025  ஜூன் 12ஆம் தேதி கூட, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

இந்த விமான விபத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணாக, அகமதாபாத்தில் உள்ள  மருத்துவ கல்லூரி மீது விமானம் விழுந்து நொறுங்கியது. ஏர் இந்தியா போயிங் விமானம்  ஜூன் 12ஆம் தேதி புறப்பட்ட சில நிமிடங்களிலே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 241 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதற்கு என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு   காரணமாக,  இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தை தொடர்ந்து, அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் சோதனை செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், கடந்த இரு தினங்களில் ஏர் இந்தியா விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது.

பதறிய பயணிகள் 

இந்த நிலையில், 2025 ஜூன் 17ஆம் தேதியான இன்று பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பை செல்ல இருந்த  ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் AI180 சான் பிரான்சிஸ்கோவில் இருந்து திட்டமிட்டபடி புறப்பட்டது. இருப்பினும், நள்ளிரவு 12.45 மணியளவில் விமானத்தில் இடது எஞ்சினில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனை அடுத்து, கொல்கத்தா விமான நிலையத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு விமானம் தரையிறங்கியது. இதானல், நான்கு மணி நேரமாக பயணிகள் விமானத்திலேயே இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, காலை 5.20 மணிக்கு விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு, வேறு விமானத்தில் அவர்கள் பயணத்தை தொடங்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow Us