Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Air India Crash : முற்றிலும் கருகி போன உடல்கள்.. DNA பறிசோதனை மூலம் அடையாளம் காணப்படும் அவலம்!

DNA Analysis for Victim Identification | அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்கு உள்ளான நிலையில், அதில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை கண்டறிய உறவினர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் வாங்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Air India Crash : முற்றிலும் கருகி போன உடல்கள்.. DNA பறிசோதனை மூலம் அடையாளம் காணப்படும் அவலம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Jun 2025 09:47 AM

அகமதாபாத், ஜூன் 14 : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் (Ahmedabad Air India Flight Accident) பலியானவர்களின் உடல்களை டிஎன்ஏ (DNA – Deoxyribonucleic Acid) சோதனையின் மூலம் கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. விமானம் வெடித்து விபத்துக்குள்ளான நிலையில், பயணிகளின் உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில், மீட்கப்பட்டன. இதன் காரணமாக உடல்களை அடையாளம் காணமுடியாத சூழல் உள்ளதால், உறவினர்களுடம் இருந்து டிஎன்ஏ பெறப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டிஎன்ஏ மூலம் எவ்வாறு உடல்கள் அடையாளம் காணப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

241 பேரை பலி வாங்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் (Air India Flight) ஒன்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு சில நொடிகளிலேயே சிக்கலை எதிர்கொண்ட நிலையில், அங்கிருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி கடும் விபத்துக்குள்ளானது.

வெடித்து சிதறிய விமானம் – உடல் கருகி பலியான 241 பேர்

விமானம் விடுதியின் மீது மோதி வெடித்து சிதறிய விபத்தில் விமான குழு உட்பட 241 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். அந்த ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.

டிஎன்ஏ மூலம் கண்டறியப்படும் உடல்கள்

ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்தவர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். இதனால் உடல்களை கண்டறிய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளை பெற்று அந்த டிஎன்ஏவும் உயிரிழந்தவர்களின் டிஎன்ஏவும் ஒத்து போகிறதா என சோதனை செய்து உடல்களை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிஜே கல்லூரியில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்க வேண்டும் என்று குஜராத் சுகாதார துறையின் முதன்மை செயலாளர் தன்ஞ்ஜய் திவேதி கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.