AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய நெசட் சபாநாயகர் விருது!

PM Narendra Modi Honoured With Israel's Prestigious Knesset Medal | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின் பிரதமர் மோடிக்கு நெசட் சபாநாயகர் என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய நெசட் சபாநாயகர் விருது!
பிரதமர் மோடிக்கு விருது வழங்கிய இஸ்ரேல்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Feb 2026 08:01 AM IST

ஜெருசலேம், பிப்ரவரி 26 : 2 நாட்கள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் (Israel) சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு (Indian Prime Minister Narendra Modi), அந்த நாட்டின் உயரிய விருதான நெசட் சபாநாயகர் மெடல் (Knesset Medal) வழங்கப்பட்டுள்ளது. இந்த பதக்கத்தை வாங்கும் முதல் இந்திய தலைவர் என்ற சிறப்பையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். இந்த நிலையில், பிரதமரின் இரண்டு நாட்கள் இஸ்ரேல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு நாட்கள் பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் இருந்து நேற்று (பிப்ரவரி 25, 2026) தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இஸ்ரேல் புறப்பட்டு சென்றார். அங்கு சென்ற அவருக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்தில் வரவேற்பு வழங்கினார். பின்னர் பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் நாட்டின் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன் பிறகு இரு நாட்டு தலைவர்களும் விமான நிலையத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர்.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்.. பதிலடிக்கு எச்சரிக்கை கொடுத்த தாலிபான்!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி

இந்த நிலையில் நேற்று மாலை பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கள் மற்றும் நட்புறவு, மரியாதையின் செய்தியை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இஸ்ரேலில் 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. அதனால் ஏற்பட்ட உங்கள் வலியை நாங்கள் உணர்ந்தோம் என்று பேசினார்.

இதையும் படிங்க : ஏலியன்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட டிரம்ப் உத்தரவு!

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட நெசட் சபாநாயகர் மெடல்

நாடாளும்னறத்தில் உரையாற்றியதை அடுத்து பிரதமர் மோடிக்கு, இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமிர்னா ஒகானா நெசட் சபாநாயகர் மெடலை வழங்கினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய இந்த பதக்கத்தை பெறும் முதல் இந்தியர் மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us