ஏலியன்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட டிரம்ப் உத்தரவு!
Files Of Aliens and UFO's | பிரபஞ்சத்தில் ஏலியன்கள் உள்ளனவா, இல்லையான் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஏலியன்கள் தொடர்பான ரகசிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன், பிப்ரவரி 20 : அமெரிக்கா (America) தன்வசம் வைத்துள்ள ஏலியன்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் குறித்த ரகசிய கோப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏலியன்கள் குறித்து டிரம்ப் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பல ஆண்டுகளாக ரகசியம் காக்கப்பட்ட தகவல்கள்
பிரபஞ்சத்தில் ஏலியன்கள் உள்ளனவா என்பது குறித்த நீண்ட நெடிய விவாதம் இன்றளவும் கூட நீடித்து வருகிறது. சில விஞ்ஞானிகள் ஏலியன்கள் இருப்பது உண்மை என கூறும் நிலையில், அதற்கான உரிய ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக ஏலியன்கள் இருக்கின்றனவா, இல்லையா என்பது தெரியாமலே உள்ளது. இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கிம் ஜாங் உன்னை தொடர்ந்து வடகொரியாவை ஆளப்போகும் அவரது மகள்?.. உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!
டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு
மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் ஏலியன்கள், பறக்கும் தட்டுகள் உள்ளிட்டவை குறித்து அனைத்து அரசு ஆவணங்களையும் தேடி எடுத்து வெளியிட சம்மந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா கூறியிருந்த நிலையில், இதன் மூலம் ஓபாமா பெரிய தவறு இழைத்துவிட்டார் என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : பிரதமர் மோடி குறித்து அதிபர் டிரம்ப் பேசிய வீடியோ.. உண்மை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
அமெரிக்க பாதுகாப்பு துறையும், நாசாவும் சேகரித்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத வான்வெளி பொருட்கள் மற்றும் ஏலியன்கள் குறித்த தகவல்களை பல ஆண்டுகளாக அமெரிக்கா ரகசிய பட்டியலில் வைத்திருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவற்றை வெளியிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.