AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு, 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை 28, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 2, 2026 தேதி வரை 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு, 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Jul 2026 06:39 AM IST

சென்னை, ஜூலை 28 : தமிழகத்தில் ஜூலை 28, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 2, 2026 தேதி வரை 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 31, 2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

மேலும், ஆகஸ்ட் 1, 2026 உள் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பக்தர்கள் கவனத்திற்கு..! திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

வானிலை மையத்தின் எக்ஸ் பதிவு

 

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மேலும், தமிழகத்தில் ஜூலை 30, 2026 அன்று முதல் நீலகிரி மாவட்டத்திலும், ஜூலை 31, 2026 மற்றும் ஆகஸ்ட் 1, 2026 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த மழை எச்சரிக்கை மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ஒருசில இடங்களில் வெப்பநிலையும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையத்தின் அறிக்கையில், தமிழகத்தில் ஜூலை 28, 2026 இன்று முதல் ஜூலை 30, 2026 தேதி வரை 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சிக்கன் பிரியர்களுக்கு அதிர்ச்சி.. வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கோழ்க்கறி விற்பனை நிறுத்தம்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 28, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Follow Us