இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தப்போகுது.. மழையும் இருக்கு.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!
TN Rain Forecast: தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலக் கீழ்மட்டக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Weather today: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு மாறுபாடுகள் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாகவே அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (ஜூலை 27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் வானிலை நிலவரம்:
இன்று முதல் ஜூலை 31 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12 இடங்களில் சதமடித்த வெயில்:
மழை அறிவிப்பு ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் 12 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிச் சுட்டெரித்துள்ளது. மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், சென்னை (மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம்), தஞ்சாவூர், திருத்தணி, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் அதிக வெயில் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
வரும் 30-ஆம் தேதி வரை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகக் காணப்படலாம். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் இயல்பை ஒட்டி இருக்கும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும் படிக்க: அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.